இஸ்ரேலின் நடவடிக்கைகள் குறித்து ஐ.நா கண்டனம்

Must Read

இஸ்ரேல் சர்வதேச சட்டங்களை மீறி, பாலஸ்தீனர்களை கட்டாயமாக இடம்பெயர்க்கிறது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை அலுவலகம் குற்றம் சாட்டியுள்ளது.

இஸ்ரேல், கடந்த 18ம் திகதி முதல் பாலஸ்தீனர்களை வெளியேற்றும் கட்டாய உத்தரவை பிறப்பித்து வருகிறது.

10 முக்கிய இடங்களை விட்டு வெளியேறுமாறு கட்டாய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ரஃபாவில் உள்ள பாலஸ்தீனர்கள் கூட பாதுகாப்பாக இல்லை என ஐக்கிய நாடுகள் அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்த இடப்பெயர்வுகள் சர்வதேச மனிதாபிமான சட்டங்களின் அடிப்படை நிபந்தனைகளுக்கே ஏற்ப இல்லை” என  ஐ.நா. மனித உரிமை பேச்சாளர் தமீன் அல்-கீதான் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் வெளியேற்றப்பட்ட மக்களுக்கு அடைக்கலம் வழங்குவதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை” எனவும் கண்டனம் வெளியிட்டுள்ளார்.

வடக்கு காசாவில் பாதி பகுதிகள் கட்டாய வெளியேற்ற உத்தரவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

தெற்கு ரஃபாவில் இருந்து வெளியேற்றப்பட்டவர்கள் பாதுகாப்பாக இல்லை.

“இஸ்ரேலின் நடவடிக்கைகள், பாலஸ்தீன  சிவிலியன்களுக்கான பாதுகாப்பு மண்டலங்களை குறைத்து வருகிறது” என ஐக்கிய நாடுகள் அமைப்பு தெரிவித்துள்ளது.

இஸ்ரேலின் இந்த நடவடிக்கைகள் சர்வதேச சமூகம் மத்தியில் பெரும் எதிர்ப்பை உருவாக்கி வருகிறது.

MORE ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ADVERTISEMENT

Contact
info@tamilnews.ch
to advertise here.

LATEST ARTICLES

ADVERTISEMENT

Contact
info@tamilnews.ch
to advertise here.