சுவிட்சர்லாந்தில் அறிமுகமாகும் நேர மாற்றம்

Must Read

சுவிட்சர்லாந்தில் நேர மாற்றம் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளைய தினம் ஞாயிறு (மார்ச் 30) அதிகாலை 2 மணி நேரம், சுவிட்சர்லாந்து மற்றும் பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளில், கடிகாரங்களில் ஒரு மணி நேரம் முன்னோக்கி நகர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் நேரம் நேரடியாக 3 மணியாக மாற்றமடையும் எனவும், இந்த நேர மாற்றம் கோடை நேரம் 30 வாரங்கள் நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

2025 கோடை நேரம் 210 நாட்கள் நீடிக்கும் எனவும் எதிர்வரும் ஒக்டோபர் 26ம் திகதி அதிகாலை 3 மணிக்கு, கடிகாரங்கள் மீண்டும் ஒரு மணி நேரம் பின்நகர்த்தப்பட்டு 2 மணியாக மாற்றப்படும், இதன் மூலம் இயல்பான நேரத்துக்கு திரும்பும் என்பது குறிப்பிடத்தக்கது.

காலநிலை நேர மாற்றத்தை ரத்து செய்ய வேண்டும் என்பதே பல அரசியல்வாதிகளின் கருத்தாக உள்ளது.

ஐரோப்பிய ஒன்றியம் இதற்கான திட்டங்களை முன்வைத்தாலும், உறுப்பு நாடுகள் இதுவரை ஒரு முடிவுக்கு வரவில்லை.

ஆரோக்கிய பாதிப்புகள்: குழந்தைகள், வயதானவர்கள் ‘மினி ஜெட்-லாக்’ (சிறு நேர மாற்றக் குழப்பம்) அனுபவிக்கலாம்.

வழிப்பாதை பாதுகாப்பு: அதிக அலுப்பினால் சாலை விபத்துக்கள் அதிகரிக்கும்.

விவசாய பாதிப்பு: பசுமாடுகளின் பால் உற்பத்தி குறையலாம்.

1973-ஆம் ஆண்டு எண்ணெய் தட்டுப்பாடு காரணமாக ஐரோப்பாவில் கோடை நேர மாற்றம் அறிமுகப்படுத்தப்பட்டது.

அதிக வெளிச்ச நேரம் கிடைப்பதன் மூலம் சக்தி வளத்தைச் சேமிக்க வேண்டும் என்பதே நோக்கமாகும்.

சுவிட்சர்லாந்து 1981-ஆம் ஆண்டு முதல் நேர மாற்றத்தை அமுல்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

MORE ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ADVERTISEMENT

Contact
info@tamilnews.ch
to advertise here.

LATEST ARTICLES

ADVERTISEMENT

Contact
info@tamilnews.ch
to advertise here.