உலக பொருளாதார அமைப்பு (WEF) கூட்டத்தில் ஹிட்லர் சல்யூட் செய்ததாக புகார் எழுந்ததால், பேசல் நகரின் (Basel City) கன்டோனல் காவல்துறையின் (Cantonal Police) ஒரு அதிகாரி பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
பேசல் போலீஸ் பேச்சாளர் ரூவென் புருக்கர் (Rooven Brucker) இந்த தகவலை Keystone-SDA செய்தி நிறுவனத்திற்குத் உறுதிப்படுத்தியுள்ளார்.
Basler Zeitung என்ற பத்திரிகை முதலில் இந்த விவகாரத்தை வெளிச்சத்துக்கு கொண்டு வந்தது.
ஜனவரியில் உலகப் பொருளாதார அமைப்பு கூட்டத்தில், அந்த அதிகாரி ஹிட்லர் சல்யூட் செய்துள்ளார் என முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், அவர் “மஸ்க் போஸ்” (Elon Musk Pose) செய்து காட்டியதாகவும், கண்காணிக்கபட்டுள்ளார்.
இது மட்டுமல்லாமல், பெண் காவல்துறையினரை அவமதித்தல் மற்றும் பணியிடத்தில் பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் குறித்த அதிகாரி மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, சுவிட்சர்லாந்து அரசு, சொஸ்டிகா (Swastika) உள்ளிட்ட தீவிரவாத சின்னங்களை தடை செய்ய நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.
இந்த சம்பவம் பேசல் காவல்துறையின் மீதான நம்பிக்கையை மேலும் பாதிக்கக்கூடும் என்று அரசியல் வட்டாரங்களில் கவலை எழுந்துள்ளது.