பிரித்தானியாவிற்கு பயணிக்கும் சுவிஸ் பிரஜைகளுக்கு கடவுச்சீட்டு மட்டும் போதாது

Must Read

எதிர்வரும் புதன்கிழமை முதல், பிரித்தானியாவிற்கு (UK) பயணிக்க பாஸ்போர்ட் மட்டும் போதாது. இப்போது, சுவிட்சர்லாந்து உள்ளிட்ட நாடுகளிலிருந்து பயணிக்கும் அனைவரும் எலக்ட்ரானிக் டிராவல் ஆத்தரைஸேஷன் (ETA) எனப்படும் புதிய இலத்திரனியல் அனுமதியை பெற்றிருக்க வேண்டும்.

இந்த புதிய விதி இங்கிலாந்து, ஸ்கொட்லாந்து, வேல்ஸ், மற்றும் வடக்கு அயர்லாந்து போன்ற அனைத்து பிரதேசங்களுக்கும் செல்லும் பயணிகளுக்கு பொருந்தும்.

  • ETA ஒரு இணையவழி அனுமதி ஆகும், இது பாஸ்போர்டுடன் இணைக்கப்படும்.
  • இதன் கட்டணம் சுமார் 11.50 சுவிஸ் பிராங்குகள் ஆகும்.
  • இது இரண்டு ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும், அதன்பிறகு புதுப்பிக்க வேண்டும்.
  • ஏப்ரல் 9 முதல், இதன் கட்டணம் 18.20 சுவிஸ் பிராங்குகளாகஅதிகரிக்கிறது.
  • ETA இல்லாமல் பயணிக்க முயற்சித்தால், விமான நிறுவனங்கள் பயணிகளை விமானத்தில் ஏற்ற மறுக்கும்.
  • UK விமான நிலையங்களில் பாஸ்போர்ட் கட்டுப்பாட்டு பகுதியில் அனுமதி மறுக்கப்படும்.
  • “UK ETA” செயலியில் அல்லது ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
  • விண்ணப்பத்துடன் பாஸ்போர்ட் புகைப்படம் மற்றும் 9 வயதுக்கு மேல் உள்ள பயணிகள் தங்கள் முகப்புகைப்படத்தையும் பதிவேற்ற வேண்டும்.

ETA விண்ணப்பத்தில், பயணிகள் பின்வரும் கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும்:
✅ உங்கள் வேலை என்ன?
✅ நீங்கள் எந்தவொரு குற்றத்திற்கும் தண்டிக்கப்பட்டதுண்டா?
✅ நீங்கள் எவராவது போர் குற்றங்கள், இன அழிப்பு (genocide), மனிதத்தன்மைக்கெதிரான குற்றங்கள், தீவிரவாத செயல்களில் ஈடுபட்டுள்ளீர்களா?
✅ நீங்கள் தீவிரவாத அமைப்புக்களில் உறுப்பினராக இருந்தீர்களா அல்லது ஆதரவு அளித்துள்ளீர்களா?

விசா பதில் எவ்வளவு நேரத்தில் கிடைக்கும்?

  • பெரும்பாலான விண்ணப்பங்களுக்கு தானியங்கி செயலாக்கத்தின் மூலம் விரைவாக அனுமதி வழங்கப்படும்.
  • எனினும், அதிகபட்சமாக மூன்று வேலை நாட்கள் வரை ஆகலாம்.

ETA மூலம் பயணிகள் எவ்வளவு காலம் UKயில் இருக்கலாம்?

  • ETA மூலம், இரண்டு ஆண்டுகளில் பல முறை பயணிக்கலாம்.
  • ஒவ்வொரு பயணத்துக்கும் அதிகபட்சம் 6 மாதங்கள் UKயில் தங்கலாம்.
  • குறுகிய கால கல்வி (6 மாதங்களுக்கு குறைவாக) பயிலவும் இந்த அனுமதி உதவும்.

பாதுகாப்பு மற்றும் வருவாய் அதிகரிப்பு

பிரித்தானிய அரசு, இந்த புதிய அனுமதியை பாதுகாப்பு சோதனைக்காக அறிமுகப்படுத்தியுள்ளது. இது மூலம் பயணிகளின் பின்புலத் தகவல்கள் பரிசோதிக்கப்படுகின்றன. அதே சமயம், கூடுதல் வருவாயும் அரசு பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

MORE ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ADVERTISEMENT

Contact
info@tamilnews.ch
to advertise here.

LATEST ARTICLES

ADVERTISEMENT

Contact
info@tamilnews.ch
to advertise here.