ஐரோப்பாவில் கொடூரக் கொலை, கொலை முயற்சி மேற்கொண்ட நபர் கைது

Must Read

ஐரோப்பாவின் பல்வேறு நகரங்களில் கல் மற்றும் கான்கிரீட் சிறுபாறைகளை கொண்டு தாக்குதல் நடத்தி, ஒருவரை படுகொலை செய்ததுடன், பலர் படுகாயமடையச் செய்த நபர் ஒருவரை பிரான்ஸில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவங்களின் பின்னணியில் செயற்பட்ட 27 வயது கமரூன் நாட்டுப் பிரஜை ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 2024ம் ஆண்டு நவம்பர் 12ம் திகதி பிரான்சின் டூலோன் நகரில், பொது போக்குவரத்திற்குள் ஒரு பெண்ணை வெறித்தனமாக தாக்கியதற்காக லேவிஸ் ஈ. (Levis E.) என்பவரை பொலிஸார் கைது செய்தனர்.

குறித்த நபருக்கு மரபணு பரிசோதனை செய்தபோது, பல்வேறு கொடூரத் தாக்குதல்களுடன் இந்த நபருக்கு தொடர்பு உண்டு என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

ஜூலை 25, 2024 – டிஜான், பிரான்ஸ்
ஒரு மருத்துவர் (nurse) மீது கல் வீசி தாக்குதல்
சந்தேக நபர் ஏற்கனவே நகரிலிருந்து வெளியேற்றப்பட்டிருந்தார், ஆனால் மீண்டும் திரும்பி தாக்குதல் நடத்தியுள்ளார்

அக்டோபர் 8, 2024 – பெர்ன், சுவிட்சர்லாந்து
30 வயது நபர், ஒரு பாதசாரி திடீரென 10 கிலோ பாறையால் தாக்கப்பட்டு உயிருக்கு போராடினார்
மரபணு மூலம் லேவிஸ் ஈ. தொடர்புடையவர் என உறுதி செய்யப்பட்டது

அக்டோபர் 23, 2024 – பாரீஸ், பிரான்ஸ்
காணாமல் போனவர்களுக்கு உதவியாளராக இருந்த ஒரு மனிதர் தூங்கிக்கொண்டிருக்கையில், கான்கிரீட் துண்டால் தாக்கப்பட்டார்
மரபணு சோதனையில் கொலையாளி யார் என்பது உறுதியானது.

அக்டோபர் 30, 2024 – ஸ்ட்ராஸ்பேர்க், பிரான்ஸ்
60 வயது வீடற்ற நபர் மீது கான்கிரீட் கல் வீசி கொலை முயற்சி

நவம்பர் 5, 2024 – ரோட்டர்டாம், நெதர்லாந்து
ஒரு வீடற்ற நபர், ரத்தக்கறை படிந்த பாறையால் தாக்கப்பட்டுள்ளார்

நவம்பர் 10, 2024 – லியான், பிரான்ஸ்
39 வயது மால்டோவியர், கோயிலின் மாடிப்படியில் தூங்கிக்கொண்டிருந்தபோது, கான்கிரீட் துண்டால் வெறித்தனமாக தாக்கப்பட்டு கொல்லப்பட்டார்
இது ஒரு திட்டமிட்ட கொலை என காவல்துறை உறுதிப்படுத்தியது

ஜூலை 26, 2020 – கோல்மார், பிரான்ஸ்
80 வயது வீடற்ற நபர், இதே மாதிரி ஒரு பாறையால் தாக்கி கொல்லப்பட்ட வழக்கு
மரபணு சோதனையில் லேவிஸ் ஈ. தொடர்பு கண்டறியப்பட்டது

தற்போது லேவிஸ் ஈ. மீது ஒரு கொலை வழக்கு, பல கொலை முயற்சி வழக்குகள் மற்றும் தீவிரமான தாக்குதல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

MORE ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ADVERTISEMENT

Contact
info@tamilnews.ch
to advertise here.

LATEST ARTICLES

ADVERTISEMENT

Contact
info@tamilnews.ch
to advertise here.