சீனாவின் மிகப்பெரிய எலக்ட்ரிக் கார் நிறுவனமான BYD தற்போது சுவிட்சர்லாந்து சந்தையில் அதிகாரப்பூர்வமாக பிரவேசித்துள்ளது.
இந்த ஆண்டு இறுதிக்குள் 15 விற்பனை மையங்களை உருவாக்க குறித்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
சுவிட்சர்லாந்தின் ஸ்ப்ரைடன்பாக் (Spreitenbach) பகுதியில் உள்ள “Umwelt Arena”வில் BYD நிறுவனம் தனது அறிமுக நிகழ்வினை நடத்தியுள்ளது.
முதல் கட்டத்தில், இரண்டு SUV மாடல்கள் உள்ளிட்ட மூன்று மாடல்கள் அறிமுகம் செய்துள்ளது.
“SEAL U DM-i” மாடலின் ஆரம்ப விலை 42,990 சுவிஸ் பிராங்குகளாக ($48,700) நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்தில் உள்ள முக்கிய நகரங்களில் விற்பனை மையங்களை அமைக்க திட்டம் குறித்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
BYD இன் முதல் காட்சியறை சூரிச்சின் Uraniastrasse பகுதியில் திறக்கப்பட உள்ளது.
பின்னர் Zug, Lugano, Bellinzona போன்ற நகரங்களிலும் விரைவில் விற்பனை மையங்கள் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க தொழிலபதிரும் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நெருங்கிய சகாவுமான எலோன மஸ்கின் டெஸ்லா கார்களுக்கு நேரடிப் போட்டியாக சீனா இந்த பிவைடி கார்களை அறிமுகம் செய்துள்ளது.