9 C
Switzerland
Wednesday, May 21, 2025

உலகப் பொருளாதாரத்துக்கு புதிய அச்சுறுத்தல் ஏற்படுத்தும் அமெரிக்க வரிகள்

Must Read

உலகப் பொருளாதாரம் தற்போது பெருந்தொற்றிற்குப் பிறகு ஏற்பட்ட பணவீக்கக் கிளர்ச்சியில் இருந்து மீள முயற்சிக்கையில், புதிதாக அமெரிக்கா அறிவித்த வரிகள் மேலும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் என்று பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

பெருந்தொகை கடன் சுமை மற்றும் அரசியல் பதற்றத்தால் ஏற்கனவே நெருக்கடிகளை எதிர்நோக்கி வரும் உலகப் பொருளாதார கடட்மைப்பு, இப்போது ஒரு முக்கிய திருப்புமுனையை சந்திக்க நேரிடலாம் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சுதந்திர வர்த்தக அமைப்பின் முடிவு?

மேற்குறிப்பிட்ட காரணிகளின் உலக வர்த்தக கட்டுப்பாட்டு முறையை அழிக்கும் ஆபத்தைக் கொண்டுள்ளன,” என நோமுரா ஆராய்ச்சி நிறுவனத்தின் முதன்மை பொருளாதார நிபுணர் டகஹிடே கியுச்சி கூறுகிறார்.

அமெரிக்கா தன்னுடைய பொருளாதார நிலையை வலுப்படுத்தும் முயற்சியாகவே இவற்றை வகுத்தாலும், இது உலகளாவிய வர்த்தக உறவுகளில் அதிக பதற்றங்களை உருவாக்கும் என சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த புதுப்பிக்கப்பட்ட வரிகளால் அமெரிக்கா மட்டுமல்லாது உலகப் பொருளாதாரமும் பெரும் பின்னடைவைச் சந்திக்கப் போகிறது. “இவை உலகளாவிய பொருளாதாரத்தை மோசமான செயல்பாடு, அதிக அத்துமீறல்கள், மற்றும் உலகளாவிய பொருளாதார மந்தநிலை (recession) நோக்கிச் செல்லும் பாதையில் தள்ளுகிறது,” என பிரான்ஸில் உள்ள INSEAD பிஸினஸ் ஸ்கூல் பொருளாதார நிபுணர் அன்டோனியோ ஃபடாஸ் கூறினார்.

டிரம்ப் அறிவித்த முக்கியமான வரி மாற்றங்கள்

அனைத்து இறக்குமதி பொருட்களுக்கு 10% அடிப்படை வரி விதிக்கப்படும் என  வெள்ளை மாளிகையின் ரோஸ் கார்டனில் உரையாற்றிய டிரம்ப் அறிவித்தார். குறிப்பாக, சீனாவுக்கு 34% மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு 20% வரி விதிக்கப்படும் என்று தெரிவித்தார். மேலும், வாகனங்கள் மற்றும் வாகன உதிரிபாகங்களுக்கு 25% வரி அறவீடு செய்யப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இதன் விளைவாக, 2024 இல் 2.5% மட்டுமே இருந்த அமெரிக்காவின் சராசரி இறக்குமதி வரி 22% ஆக உயர்ந்துள்ளது. இது கடந்த 1910 ஆம் ஆண்டிற்குப் பிறகு இல்லாத அளவிற்குக் கூடிய ஒரு வரி வீதம் என்று பிட்ச் ரேடிங்ஸ் Fitch Ratings நிறுவனம் தெரிவித்துள்ளது.

உலகளாவிய மந்தநிலைக்கு முன்னோட்டமா?

இந்த வரிகள் உலக பொருளாதாரத்துக்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். “இது அமெரிக்க பொருளாதாரம் மட்டுமல்ல, உலக பொருளாதாரத்திற்கே ஒரு மாறுதலாக இருக்கும்,” என Fitch Ratings பொருளாதார நிபுணர் ஒளு சொனொலா தெரிவித்துள்ளார். இதனால் பல நாடுகள் பொருளாதார மந்தநிலைக்கு (recession) செல்வதற்கான வாய்ப்பு அதிகம் என குறிட்டுள்ளார்.

இந்நிலையில், சர்வதேச நாணய நிதியம் (IMF) அமெரிக்கா மற்றும் உலக பொருளாதாரத்தில் ஏற்பட்டிருக்கும் தாக்கத்தை அவதானித்து வருகிறது. எனினும், அதன் நிர்வாக இயக்குநர் கிரிஸ்டலினா ஜோர்ஜீவா, தற்போது உலக பொருளாதார மந்தநிலை எதிர்பார்க்கவில்லை என்றாலும், 2025 ஆம் ஆண்டிற்கான 3.3% வளர்ச்சி கணிப்பில் சிறிய மாற்றம் செய்யப்படலாம் என குறிப்பிட்டுள்ளார்.

சமச்சீர் வர்த்தகத்திற்குத் தீர்ப்பா?

சில நாடுகளுக்கான வரிகள் வெவ்வேறு வீதத்தில் விதிக்கப்பட்டுள்ளன. உதாரணமாக, பிரிட்டனுக்கான வரி 10% ஆகவும், கம்போடியாவிற்கு 49% ஆகவும் விதிக்கப்பட்டுள்ளது.

உலகளாவிய வர்த்தக யுத்தம் உருவானால், சீனா போன்ற பொருளாதாரங்கள் புதிய சந்தைகளை தேட வேண்டிய நிலை ஏற்படும். அதே நேரத்தில், அமெரிக்கா வரிகளால் தன்னுடைய உள்நாட்டு பொருளாதாரத்தையே மந்தநிலைக்கு தள்ளும் நிலை உருவாகலாம். இதனால், அமெரிக்காவுடன் நெருக்கமான பொருளாதார உறவுகளை வைத்திருக்கும் வளர்ந்து வரும் நாடுகளின் நிலையும் மோசமாகும்.

உலக பொருளாதாரத்தில் புதிய மாற்றங்கள்

இந்த வரிகள் அரசுகள் மற்றும் மத்திய வங்கிகள் எதிர்கொள்ளும் சிக்கல்களை அதிகரிக்கும். முக்கியமாக, நீண்ட காலமாக கட்டுப்பாட்டில் இருந்த பணவீக்கம் (inflation) தற்போது மேலும் அதிகரிக்கலாம்.

ஜப்பான் மற்றும் தென் கொரியா போன்ற நாடுகள், அமெரிக்காவின் புதிய வரி விதிப்பால் மிகுந்த தாக்கத்திற்கு உள்ளாகலாம். குறிப்பாக, ஜப்பானின் வாகன ஏற்றுமதி நிறுவனங்கள் 24% வரியால் கடுமையான பின்னடைவைச் சந்திக்கலாம்.

“அமெரிக்காவில் நடப்பது அமெரிக்காவிலேயே முடிவதில்லை,” என கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் பொருளாதார நிபுணர் பாரி ஐசன்கிரீன் கூறுகிறார். “அமெரிக்க பொருளாதாரம் உலகளாவிய வர்த்தகத்துடனும் முதலீட்டு இடஒதுக்கீடுகளுடனும் மிக நெருக்கமாக இணைந்துள்ளது.”

மாறுபட்ட உலகம்” – லகார்டின் எச்சரிக்கை

அமெரிக்காவின் தற்போதைய பொருளாதார நிலைமைக்கு பதிலளிக்க வேண்டிய அவசியம் இருப்பதாக ஐரோப்பிய மத்திய வங்கியின் தலைவர் கிறிஸ்டின் லகார்ட், கூறியுள்ளார். “இலாபகரமான மாறுபட்ட (inverted) உலகத்தில், ஐரோப்பாவும் அதற்கேற்ப பொருளாதார மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும்,” என அவர் எச்சரித்துள்ளார்.

இறந்துக்கொண்டிருக்கும் உலகளாவிய வர்த்தக ஒழுங்குமுறையை மீண்டும் உயிர்ப்பிக்க வேண்டிய கட்டாயம் உலக நாடுகளுக்கு ஏற்பட்டுள்ளது என அவர் வலியுறுத்தியுள்ளார்.

டிரம்பின் புதிய வரிகள் உலகளாவிய பொருளாதாரத்தில் அதிக நெருக்கடிகளை உருவாக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. வளர்ந்து வரும் நாடுகள் மற்றும் அமெரிக்காவுடன் வணிக உறவுகளை வைத்திருக்கும் பொருளாதாரங்கள் இதனால் அதிக பாதிப்புக்குள்ளாகலாம். உலகளாவிய சந்தையில் ஏற்பட்டிருக்கும் இந்த புதிய திருப்பம், வர்த்தக போக்குகளின் எதிர்காலத்தை எப்படி மாற்றும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

மூலம் : ரொய்டர்ஸ்

MORE ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

LATEST ARTICLES