இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கை விஜயம்

Must Read

இந்திய பிரதமர் நரேந்திர மோடி, மூன்று நாட்கள் அதிகாரப்பூர்வ விஜயம் மேற்கொண்டு சற்று முன்னர்  பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் (BIA) சென்றடைந்தார்.

இந்திய அரசின் சிறப்பு போயிங் 777 விமானமானம் “India – 01” மூலம், அவர் தாய்லாந்தின் பாங்காக்கில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்றடைந்துள்ளார்.

இந்த விஜயத்தில் அவருடன் இந்திய வெளிவிவகார அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கர் உட்பட பலர் கலந்து கொண்டுள்ளனர்.

பாங்காக்கில் நடைபெற்ற BIMSTEC உச்சி மாநாட்டில் பங்கேற்ற பின்னர், அவர்கள் இலங்கைக்கு இந்த அதிகாரப்பூர்வ விஜயத்தினை மேற்கொண்டுள்ளனர்.

இந்திய பிரதமர் மற்றும் அவரது குழுவினரை வரவேற்க, இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் கட்டுநாயக்க விமான நிலையத்தின் சிறப்பு விருந்தினர் மண்டபத்தில் காத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மழையால் பாதிக்கப்பட்ட கட்டுநாயக்க விமான நிலைய பகுதியில், வரவேற்பு விழா அந்த மண்டபத்திலேயே நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

 

MORE ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ADVERTISEMENT

Contact
info@tamilnews.ch
to advertise here.

LATEST ARTICLES

ADVERTISEMENT

Contact
info@tamilnews.ch
to advertise here.