சுவிஸில், வெளிநாட்டு குற்றவாளிகளை கட்டுப்படுத்த விசேட செயலணி

Must Read

சுவிட்சர்லாந்து அரசும், கான்டன்களும் (மாநிலங்கள்) சேர்ந்து, தீவிர குற்றங்களில் ஈடுபடும் வெளிநாட்டு குடிமக்கள் மற்றும் அகதிகளை நிரந்தரமாக கைது செய்து, நாடுகடத்தல்களை செயல்படுத்த புதிய விசேட செயலணி (task force) ஒன்றை அமைக்க உள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

இத்திட்டம், கான்டன்களின் நீதித்துறை மற்றும் காவல் துறை இயக்குநர்களின் மாநாட்டின் முயற்சியில் தொடங்கப்பட்ட பரீட்சார்த்த திட்டமாகும்.

இத்திட்டத்திற்கு மத்திய அரசும், கான்டன்களும், நகரங்களும் மற்றும் நகராட்சிகளும் இணக்கப்பாட்டை தெரிவித்துள்ளன.

இதனுடன், இந்த வகை நபர்களை (தீவிர குற்றவாளிகள்) நாடு கடத்துவதற்கான சட்டங்களும் சீராய்வு செய்யப்பட உள்ளன.

குறித்த நபர்களை கைதுசெய்வது மற்றும் நாடுகடத்தும் நடவடிக்கைகள் எளிமைப்படுத்தப்படுவதே குறிக்கோளாகும்.

தீவிர குற்றச்செயல்களில் தொடர்ந்து ஈடுபடும் அல்லது சுவிட்சர்லாந்து வருகையின்போது குற்றவியல் எச்சரிக்கைகளுக்கு உள்ளாகும் அல்லது நாடுகடத்தலுக்காக தற்காலிகமாக கைது செய்யப்பட்டுள்ள அகதிகள் மற்றும் வெளிநாட்டு குடிமக்களை, இந்த புதிய விசேட செயலணி கான்டன்கள் மற்றும் மத்திய அரசாங்கத்திற்கு அறிவிக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

MORE ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ADVERTISEMENT

Contact
info@tamilnews.ch
to advertise here.

LATEST ARTICLES

ADVERTISEMENT

Contact
info@tamilnews.ch
to advertise here.