ஐரோப்பிய ஒன்றிய பொருளாதார அமைச்சர்கள் கூட்டத்தில் சுவிஸ் நிதி அமைச்சர் பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வரி விதிப்பு மற்றும் ஐரோப்பிய பொருளாதார வளர்ச்சி தொடர்பாக எதிர்வரும் வெள்ளிக்கிழமை போலந்தின் வார்சாவில் இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் பொருளாதார மற்றும் நிதி அமைச்சர்களின் (Ecofin) சந்திப்பில் சுவிட்சர்லாந்தின் நிதி அமைச்சர் கரின் கெல்லர்-சுட்டர், பங்கேற்க உள்ளார்.
சுவிட்சர்லாந்து ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பினராக இல்லாவிட்டாலும், இப்போது முதன்முறையாக ஒரு Ecofin சந்திப்பில் அதற்கான அழைப்பை பெற்றுள்ளது.
நாடாளுமன்றத் தலைவராகவும் செயல்படுகிற கெல்லர்-சுட்டர், யுத்தம் மற்றும் அரசியல் நெருக்கடிகள் போன்ற புவிசார் மாற்றங்கள் அடிப்படையில் ஐரோப்பியாவின் பொருளாதார வளர்ச்சி குறித்து நடைபெறும் முக்கிய கலந்துரையாடலில் பங்கேற்க உள்ளார்.
மேலும் சில நாடுகளின் நிதி அமைச்சர்களுடன் இருதரப்பு சந்திப்புகளையும் நடத்த உள்ளதாக சுவிஸ் நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த சந்திப்பில், அமெரிக்காவின் டிரம்ப் நிர்வாகம் விதித்துள்ள புதிய சுங்கக் கட்டணங்கள் ஐரோப்பாவிற்கு ஏற்படுத்தும் விளைவுகள் குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது.