அனைத்து சீன இறக்குமதிகளுக்கு 104% வரி விதிக்கும் அமெரிக்கா; வர்த்தக போர் உக்கிரம்

Must Read

சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்து பொருட்களுக்கும் வியக்கவைக்கும் அளவான 104% வரிகளை புதன்கிழமை முதல் விதிக்க உள்ளதாக வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கரோலைன் லேவிட்ட் அறிவித்தார்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளார்.

இது, டிரம்ப் தனது இரண்டாவது பதவிக்காலத்தை தொடங்குவதற்கு முன்பே அமலில் இருந்த சீனாவுக்கான வரிகளுக்கு மேலதிகமான வரிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்புதிய வரி விதிப்பிற்கு முன்னதாகவே, டிரம்ப் அறிவித்திருந்த “வரி திட்டத்தின் கீழ், சீன பொருட்களில் ஏற்கனவே 34% வரி புதன்கிழமை முதல் உயர்த்தப்பட உள்ளது.

ஆனால் சீனா, அமெரிக்காவிற்கு எதிரான 34% பதிலடி வரிகளை செவ்வாய்க்கிழமை நண்பகல் வரை ரத்து செய்ய மறுத்ததால், ஜனாதிபதி டிரம்ப் மேலும் 50% வரியை சேர்த்து, மொத்தமாக 84% அதிகமாக வரிகள் விதிக்க முடிவு செய்துள்ளார்.

மேற்கொள்ளப்படும் கூடுதல் 50% வரி ஒரு தவறின் மேல் இன்னொரு தவறு” என கண்டித்து, அமெரிக்கா மீது மேலும் கடுமையான பதிலடி நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளதாக சீனாவின் வர்த்தக அமைச்சகம், தெரிவித்துள்ளது.

இந்த அறிவிப்பால் அமெரிக்க பங்குச் சந்தை பாதிக்கப்பட்டது.

செவ்வாய்க்கிழமை காலை உயரும் நிலையில் இருந்த பங்குகள், பிற்பகுதியில் குறைந்து சென்றன. மாலை 3 மணிக்குள், டோ ஜோன்ஸ், நாஸ்டாக் மற்றும் எஸ் & பி 500 ஆகியவை அனைத்தும் எதிர்மறையான நிலைக்கு சென்றன.

“அமெரிக்க தொழிலாளர்களை தவறாக கையாளும் சீனா போன்ற நாடுகள் பதிலடி நடவடிக்கைகள் எடுப்பது ஒரு தவறான முடிவாகும்,” என லேவிட்ட் கூறியுள்ளார்.

சீனாவுக்கு ஒப்பந்தம் செய்ய விருப்பம் இருக்கிறது, ஆனால் அதை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை அவர்கள் அறியவில்லை,” என்றும் அவர் கூறியுள்ளார்.

இருப்பினும், சீனாவுக்கான வரிகளை குறைக்கும் வகையில் டிரம்ப் என்ன விதமான ஒப்பந்தங்களை பரிசீலிக்கிறார் என்பதற்கு பதில் வழங்கப்படவில்லை.

கடந்த பெப்ரவரியில் டிரம்ப் அனைத்து சீன பொருட்களிலும் 10% வரிகளை விதித்தார், எந்தவித விலக்கு இல்லாமல். இது, சீனாவின் சட்டவிரோத குடியேற்றங்களுக்கு ஆதரவு மற்றும் அமெரிக்காவுக்கு ஃபெண்டனில் போன்ற போதைப்பொருட்கள் கடத்தப்படுவதை காரணமாக கூறி அமல்படுத்தப்பட்டது. கடந்த மாதம், இந்த வரிகளை அவர் இரட்டிப்பாக்கினார்.

டிரம்ப் தனது முதல் பதவிக்காலம் முடிவடையும் போது, சீன பொருட்களில் அமெரிக்காவின் சராசரி வரி வீதம் 19.3% ஆக இருந்தது. பின்னர், பைடன் நிர்வாகம் பெரும்பாலான வரிகளை நீக்காமல் வைத்ததுடன், மேலும் சில வரிகளையும் சேர்த்தது, இதனால் சராசரி வரி வீதம் 20.8% ஆக உயர்ந்தது.

ஆனால் இப்பொழுது, புதன்கிழமை முதல், சீனாவிலிருந்து அமெரிக்காவிற்கு வரும் பொருட்கள் மீது விதிக்கப்படும் மொத்த சராசரி வரி வீதம் சுமார் 125% ஆக உயர்த்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

MORE ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ADVERTISEMENT

Contact
info@tamilnews.ch
to advertise here.

LATEST ARTICLES

ADVERTISEMENT

Contact
info@tamilnews.ch
to advertise here.