9 C
Switzerland
Wednesday, May 21, 2025

உலகின் சிறந்த விமான நிலையம் எது!

Must Read

சிங்கப்பூர் சாங்கி விமான நிலையம் (Singapore Changi Airport) தொடர்ந்து 13வது முறையாக உலகின் சிறந்த விமான நிலையமாக தேர்வாகியுள்ளது.

ஏர் டிரான்ஸ்போர்ட் மதிப்பீட்டு நிறுவனமான ஸ்கைட்ராக்ஸ் (Skytrax) வழங்கிய 2025 ஆம் ஆண்டுக்கான தர வரிசையில் இந்த விபரம் வெளியிடப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் சாங்கி விமான நிலையம் என்பது ஒரு சாதாரண விமான நிலையமல்ல – இது ஒரு முழுமையான அனுபவ தளமாக திகழ்கிறது என தெரிவிக்கப்படுகின்றது.

பயணிகள் தங்கள் பைகளை 48 மணி நேரத்திற்கு முன்பே ஒடைப்படைத்து விட்டு, விமான நிலையத்திலேயே விடுமுறையை அனுபவிக்கலாம்.

Jewel மால் எனும் 10 மாடி பரப்பை கொண்ட வணிக வளாகம், 2024ல் மட்டும் 8 கோடி பேரை வரவேற்றுள்ளது.

உலகின் மிகப்பெரிய உள் நீர்வீழ்ச்சி (Rain Vortex – 40 மீட்டர் உயரம்), கதிரியக்க பூச்சிகள் தோட்டம், சினிமா, கலைக் கண்காட்சி, டைனோசர் பூங்கா, ஸ்பா, ஹோட்டல்கள் என ஏராளமான வசதிகள் சிங்கப்பூர் விமான நிலையத்தில் காணப்படுகின்றது.

உலகின் சிறந்த விமான நிலைய உணவகம், சிறந்த கழிப்பறை வசதி, ஆசியாவின் சிறந்த விமான நிலையம் ஆகிய விருதுகளும் சாங்கி விமான நிலையத்திற்கு வழங்கப்பட்டுள்ளன.

அடுத்த ஆறு ஆண்டுகளில் $2 பில்லியன் செலவில் சேவைகள் மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகின் சிறந்த விமான நிலையங்கள் – 2025 பட்டியல் (Skytrax அடிப்படையில்):

  1. சிங்கப்பூர் சாங்கி (Singapore Changi)
  2. ஹமாத் இன்டர்நேஷனல் – கத்தார் (Hamad International, Doha)
  3. டோக்கியோ ஹனெடா (Tokyo Haneda) – உலகின் மிகச் சுத்தமான விமான நிலையம்
  4. இன்சியான் – தென்கொரியா (Incheon International, Seoul) – சிறந்த ஊழியர்கள்
  5. நரிதா – ஜப்பான் (Narita International, Tokyo)
  6. ஹாங்காங் இன்டர்நேஷனல் (Hong Kong International) – சிறந்த குடிவரவு சேவைகள்
  7. பாரிஸ் சார்ல்ஸ் டி கால் (Paris Charles de Gaulle) – ஐரோப்பாவின் சிறந்த விமான நிலையம்
  8. ரோம் ஃபியுமிசினோ (Rome Fiumicino) – தெற்கு ஐரோப்பாவின் சிறந்தது
  9. ம்யூனிக் (Munich) – மத்திய ஐரோப்பாவின் சிறந்தது
  10. சூரிச் (Zurich) – ஐரோப்பாவின் சுத்தமான விமான நிலையம்

MORE ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

LATEST ARTICLES