முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழு விசாரணை நடத்த உள்ளது.
எதிர்வரும் 17ம் திகதி ரணிலிடம் விசாரணை நடத்தப்பட உள்ளதாக லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழு அறிவித்துள்ளது.
முன்னாள் அமைச்சர் சாமர சம்பத் தஸாநாயக்கவிற்கு எதிரான ஊழல் மோசடி வழக்குத் தொடர்பில் ரணிலிடம் வாக்கு மூலம் பதிவு செய்யப்பட உள்ளது.
சாமர சம்பத் தஸாநாயக்கவின் வழக்குத் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்றைய தினம் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டிருந்தார்.
இந்த கருத்துக்கள் தொடர்பில் ரணிலிடம் விசாரணை நடத்தப்பட உள்ளதாக ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இதன்படி குறித்த கருத்துக்கள் தொடர்பில் வாக்கு மூலமொன்றை அளிப்பதற்கு எதிர்வரும் 17ம் திகதி ஆணைக்குழுவின் எதிரில் முன்னிலையாகுமாறு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.