உலகின் முதனிலை சமூக ஊடக நிறுவனங்களில் ஒன்றான முகநூல் நிறுவனம் இஸ்ரேலுக்கு ஆதரவான வகையில் செயற்பட்டு வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ட்ராப் சைட் (Drop Site) என்ற ஆன்லைன் ஊடக நிறுவனம் வெளியிட்ட புதிய அறிக்கையின்படி, 2023 அக்டோபரில் இஸ்ரேல்-காசா போர் தொடங்கியதிலிருந்து, Facebook மற்றும் Instagram தளங்களில் இஸ்ரேலை விமர்சிக்கும் பதிவுகள் மீது மெட்டா நிறுவனம் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
உள்ளக தகவல்கள் மற்றும் ஊழியர்கள் வழங்கிய அறிக்கைகள் மூலம் Drop Site தெரிவித்திருப்பதாவது:
மெட்டா நிறுவனம், இஸ்ரேலிய அரசால் சமர்ப்பிக்கப்பட்ட அனைத்து பதிவுகளை நீக்கும் கோரிக்கைகளில் 94% ஆக உடனடி ஒத்துழைப்பு வழங்கியுள்ளது.
இதன் அடிப்படையில், 90,000க்கும் மேற்பட்ட பதிவுகள் சுமார் 30 வினாடிகளில் நீக்கப்பட்டுள்ளன.
மெட்டா நிறுவனத்தின் தானியங்கி “டேக்-டவுன்” (Automated takedown) செயல்முறைகள் மூலம், 2023 இறுதி மூலமாக 38.8 மில்லியன் பதிவுகள் “அதிகாரபூர்வ நடவடிக்கை”க்கு உள்ளாகியுள்ளன.
இஸ்ரேலின் பதிவுகள் நீக்கக் கோரிக்கைகள் பெரும்பாலும் அரபு மற்றும் முஸ்லிம் பெரும்பான்மை நாடுகளில் உள்ள பயனாளர்களை குறிவைத்து வந்துள்ளன” என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல் உலகளாவிய அளவில் பதிவுகளை நீக்க கோரும் மிகப்பெரிய நாடாக திகழ்கிறது. மெட்டா நிறுவனம் இந்தக் கோரிக்கைகளுக்கு இணங்கித் தான் செயல்பட்டுள்ளது.
இதன் விளைவாக, இன்றைய உலகின் மிகப்பெரிய ‘மாஸ் தணிக்கை’ (பொதுமக்களை பரந்த அளவில் தணிக்கும் நடவடிக்கை) நிகழ்ந்து வருகிறது என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.