கொரோனா பெருந்தொற்றால் ஏற்பட்ட பொருளாதார மற்றும் பயண தடைகளை கடந்த பிறகு, உலக விமானப் பயணத்துறையில் மிகப்பெரிய திருப்புமுனை கடந்த 2024-ல் ஏற்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு உலகளவில் 9.5 பில்லியன் பயணிகள் விமானங்களை பயன்படுத்தியுள்ளனர் என Airports Council International (ACI World) தகவல் வெளியிட்டுள்ளது.
இது 2019-ம் ஆண்டை விட 3.8% அதிகம் மற்றும் 2023-ம் ஆண்டைவிட 9% அதிக வளர்ச்சி என பதிவு செய்யப்பட்டுள்ளது.
2024-ம் ஆண்டின் உலகின் முதல் 10 பரபரப்பான விமான நிலையங்கள்
இடம் | விமான நிலையம் | பயணிகள் எண்ணிக்கை | வளர்ச்சி % (2023-இன் மீது) |
1 | அட்லாண்டா (ATL) | 108.1 மில்லியன் | +3.3% |
2 | துபாய் (DBX) | 92.3 மில்லியன் | +6.1% |
3 | டல்லஸ்-போர்ட் வார்த் (DFW) | 87.8 மில்லியன் | +7.4% |
4 | டோக்கியோ ஹனெடா (HND) | 85.9 மில்லியன் | +9.1% |
5 | லண்டன் ஹீத்ரோ (LHR) | 83.9 மில்லியன் | +5.9% |
6 | டென்மார் (DEN) | 82.4 மில்லியன் | +5.8% |
7 | இஸ்தான்புல் (IST) | 80.1 மில்லியன் | +5.3% |
8 | சிகாகோ ஓ’ஹேர் (ORD) | 80 மில்லியன் | +8.3% |
9 | புது தில்லி (DEL) | 77.8 மில்லியன் | +7.8% |
10 | ஷாங்காய் புடாங் (PVG) | 76.8 மில்லியன் | +41% |
எதிர்கால விமான பயண வளர்ச்சி — வாய்ப்பும் சவாலும்!
ACI World இயக்குநர் ஜஸ்டின் எர்பாச்சி கூறியதுபோல், வரும் காலங்களில் ஆசியா பசிபிக், இந்தியா, சீனா, லத்தீன் அமெரிக்கா போன்ற நாடுகளில் பயண வளர்ச்சி அபாரமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய விமான சேவைகள், விசா தளர்வுகள், விமான நிலைய மேம்பாடுகள் மற்றும் சர்வதேச இணைப்புகள் மூலம் இந்த வளர்ச்சி தொடர்ந்து உருவாகும் என நம்பப்படுகிறது.
“2045-க்குள் உலக பயணிகளின் எண்ணிக்கை இருமடங்காகும்” என ACI World நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளது.