4.1 C
Switzerland
Thursday, April 17, 2025

சீனாவுக்கு வரித் தளர்வுகள் இல்லை என்று டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு!

Must Read

வர்த்தக போர் தொடர்பான நிலைப்பாட்டில் தளர்வில்லை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

சீனாவுக்குச் சலுகை வழங்கியதாகக் காணப்பட்ட அவரது நிர்வாகத்தின் அறிவிப்புக்குப் பிறகு, “எந்த நபரும் வரி கட்டுவதிலிருந்து தப்பிக்கப் போவதில்லை” என அவர் தெரிவித்துள்ளார்.

சில உயர்தொழில்நுட்ப தயாரிப்புகளுக்கான “மறுமாற்ற வரி”யிலிருந்து விலக்கு வழங்கப்பட்டிருந்தாலும், ஸ்மார்ட்போன்கள், மடிக்கணினிகள் உள்ளிட்ட தயாரிப்புகள் 20% வரிக்குச் உட்படுவதை அவர் மீண்டும் உறுதிப்படுத்தினார். இவை வெறும் வேறு ஒரு வரிக்கட்டத்திற்கு மாற்றப்படுவதாகவும் அவர் கூறினார்.

“சிறப்பு சலுகை எதுவும் இல்லை; சீனா போன்ற விரோதமான வர்த்தக நாடுகளால் கட்டுப்படுத்தப் படக்கூடிய நிலைக்கு அமெரிக்கா செல்லாது,” என ட்ரம்ப் தனது Truth Social பக்கத்தில் பதிவிட்டார்.

அடுத்த வாரத்தில் செமி கன்டக்டர் தொழில்நுட்பங்களில் (Semiconductors) புதிய வரிகளை அறிவிக்க இருப்பதாகத் தெரிவித்தார்.

“இந்த வரிகள் விரைவில் நடைமுறைக்கு வரும்,” என்றும், சில நிறுவனங்களுக்கு தற்காலிகமாக தளர்வு வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.

சீனாவில் தயாரிக்கப்படும் உயர் தொழில்நுட்ப பொருட்களுக்கு வழங்கப்பட்ட தற்காலிக விலக்கு குறித்தும், அடுத்த சில வாரங்களில் செமி கன்டக்டர் தயாரிப்புகளுக்கான புதிய வரிகள் அமலுக்கு வரும் என அமெரிக்க வர்த்தக செயலாளர் ஹோவர்ட் லட்னிக் தெரிவித்தார்.

இந்த உயர் தொழில்நுட்ப பொருட்கள் ‘மறுமாற்ற வரி’யில் இருந்து விலக்கபட்டுள்ளன, ஆனால் செமி கன்டக்டர்களுக்கான வரிக்குள் சேர்க்கப்பட்டுள்ளன. எனவே, இன்னும் ஒரு அல்லது இரண்டு மாதங்களில் இவை அமலாகும்,” என்று லட்னிக் கூறினார்.

அமெரிக்கா-சீனா இடையே நடைபெறும் வரி போரில், அமெரிக்கா சீன பொருட்கள் மீது வரியை 145% ஆக உயர்த்தியுள்ள நிலையில், சீனா தன் பதிலடி நடவடிக்கையாக அமெரிக்க தயாரிப்புகளுக்கு 125% வரியை விதித்துள்ளது.

இந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை, அமெரிக்க சுங்கத்துறை ஒரு அறிவிப்பு வெளியிட்டு, செமி கன்டக்டர் சாதனங்கள், தட்டை திரை காட்சிப்படுத்திகள் (Flat Panel Displays), கணினிகள் உள்ளிட்ட 20 வகையான உயர் தொழில்நுட்ப தயாரிப்புகள் “மறுமாற்ற வரி”யிலிருந்து விலக்கப்படுவதாக அறிவித்தது.

“சிறிய முன்னேற்றம்” என வரவேற்பு சீனாவின் வெளியுறவு அமைச்சகம் இதற்கு வெளியிட்டது. ஆனால், “வரிகளை முழுமையாக ரத்து செய்யவேண்டும்” என அமெரிக்காவிடம் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளது.

MORE ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

LATEST ARTICLES