அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான நிர்வாகம், ஹார்வர்ட் பல்கலைக்கழகத்துக்கு வழங்கப்பட்டிருந்த $2.2 பில்லியன் மதிப்புள்ள பல ஆண்டு நிதி உதவிகளையும், $60 மில்லியன் மதிப்புள்ள ஒப்பந்தங்களையும் தற்காலிகமாக முடக்கியது.
இதற்கான காரணம், ஹார்வர்ட் பல்கலைக்கழகம், அரசின் கொள்கை மாற்ற கோரிக்கைகளை நிராகரித்தமையேயாகும்.
இந்த ஒத்துழைப்பு முறையை அரசே இப்போது விலக்குவது, மில்லியன் கணக்கான மக்களின் ஆரோக்கியத்தையும், நாட்டின் பொருளாதார நிலைத்தன்மையையும் ஆபத்தில் தள்ளும்,” என ஹார்வர்ட் பல்கலைக்கழகம் சுட்டிக்காட்டியுள்ளது.
பல்கலைக்கழகம் கடந்த வாரம் பெடரல் குழுவிடமிருந்து புதிய கொள்கை மாற்றக் கோரிக்கைகளைப் பெற்றது. அந்தக் கோரிக்கைகள் ஏற்கப்படாவிட்டால், அரசுடன் நிதி தொடர்புகளைத் தொடர முடியாது என எச்சரிக்கப்பட்டிருந்தது.
இந்த ஒப்பந்தத்தை ஏற்க முடியாது என்பதை சட்ட ஆலோசகர் வழியாக அரசிடம் அறிவித்துள்ளோம். பல்கலைக்கழகம் தனது சுதந்திரத்தையும் அரசியலமைப்பால் வழங்கப்படும் உரிமைகளையும் இழக்காது,” என்று ஹார்வர்ட் பல்கலைக்கழக அதிபர் அலன் எம். கார்பர் வலியுறுத்தியுள்ளார்.
ட்ரம்ப் நிர்வாகம் அமெரிக்க முழுவதும் பல்கலைக்கழகங்களில் கொள்கை மாற்றங்களை எதிர்பார்த்து பல்வேறு இடங்களில் நிதி உதவிகளை தடை செய்யும் முயற்சியை மேற்கொண்டுள்ளது. ஆனால், ஹார்வர்ட் பல்கலைக்கழகம் இதை பகிரங்கமாக எதிர்த்துள்ள முதல் உயர்தர கல்வி நிறுவனமாக இந்த விவகாரம் உருவெடுத்துள்ளது.
அமெரிக்க அரசின் இந்தக் கோரிக்கைகள், இஸ்ரேல்-ஹமாஸ் போர் பின்னணியில் கல்லூரிகளில் ஏற்பட்ட எதிர்ப்பு சம்பவங்களை கட்டுப்படுத்தும் ஒரு முயற்சியாகவே பார்க்கப்படுகிறது.