கடந்த 2024ஆம் ஆண்டில் சுவிட்சர்லாந்தில் முட்டைகளின் பயன்பாடு அனைத்து முந்தைய வருடங்களையும் மிஞ்சி புதிய சாதனையை நிலைநிறுத்தியுள்ளது என சுவிட்சர்லாந்து விவசாய அலுவலகம் (FOAG) அறிவித்துள்ளது.
கடந்த 2024ம் ஆண்டில் 1.78 பில்லியன் முட்டைகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது என்பதுடன் இது கடந்த வருடத்தை விட 5.7% அதிகம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
கொரோனா காலத்தில் விற்பனை மிக அதிகமாக இருந்தபோதும், இந்த புதிய எண்ணிக்கை அதை கூட மிஞ்சியுள்ளது.
இந்த உயர்வுக்கு முக்கியக் காரணமாக மக்கள் தொகை உயர்வு மற்றும் தலைமுறை மாற்றங்களால் ஒருவருக்கு ஒரு ஆண்டுக்கு உள்ளூர் சராசரி பயன்படுத்தும் முட்டை எண்ணிக்கை 197.7 ஆக உயர்ந்துள்ளது.
சுவிட்சர்லாந்தின் மக்கள் தொகை தற்போது சுமார் 9 மில்லியன் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு முட்டை உற்பத்தி 2024ல் 2.8% உயர்ந்து 1.12 பில்லியன் முட்டைகளாக இருந்தாலும், முழுமையான தேவையை பூர்த்தி செய்ய முடியவில்லை.
இப்போது உள்ளூர் உற்பத்தி, சந்தையில் உள்ள தேவையின் 62.5% மட்டுமே பூர்த்தி செய்கின்றது. எஞ்சியவை நெதர்லாந்து, இத்தாலி, ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.