கிழக்கு மாகாண முன்னாள் முதல்வரும், தற்போது ரகசிய போலீஸாரின் காவலில் வைக்கப்பட்டுள்ள சிவநேசதுரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையானை சந்திக்க முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில அவர்கள் அனுமதி கோரியிருந்தார்.
அந்த கோரிக்கையை புலனாய்வுப் பிரிவு ஏற்றுக்கொண்டதால், பிள்ளையானை சந்திக்க அவருக்கு அதிகாரபூர்வ அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதற்கான முக்கியக் காரணம், பிள்ளையானின் சட்டத்தரணியாக தற்போது உதய கம்மன்பில செயற்பட்டு வருவதுதான் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரை கடத்தி காணாமல் ஆக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய விசாரணைகளின் போது பிள்ளையான் கைது செய்யப்பட்டு, தற்போது குற்றப்புலனாய்வு பிரிவின் (CID) காவலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.