அமெரிக்காவின் வரி  சுவிஸ் பொருளாதாரத்திற்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு

Must Read

அமெரிக்காவின் புதிய வரி விதிப்பு நடவடிக்கைகள் சுவிட்சர்லாந்தின் பொருளாதாரத்தை கடுமையாக பாதிக்கக் கூடியவை என்றாலும் முழுமையான பொருளாதார சரிவு ஏற்படாது என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

மார்ச் 12ஆம் திகதி முதல், அமெரிக்கா ஆலுமினியம் மற்றும் ஸ்டீல் தயாரிப்புகளுக்கு 25% வரி விதித்து, அதன் பிறகு ஏப்ரல் 3ஆம் திகதி முதல் கார்கள் மீது கூடுதல் 25% வரி விதித்துள்ளது.

மேலும் ஏப்ரல் 5ஆம் திகதி முதல், உலக நாடுகளிலிருந்து இறக்குமதியாகும் பெரும்பாலான பொருட்களுக்கு கூடுதல் 10% ஒரே மாதிரி வரி அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், சுவிட்சர்லாந்து உள்ளிட்ட சில நாடுகளுக்கு ஏப்ரல் 9ம் திகதியன்று அறிவிக்கப்பட்டிருந்த 21% கூடுதல் வரி தீர்மானங்கள், நடைமுறைக்கு வந்த சில நாட்கள் கழித்து 90 நாட்களுக்கு இடைநிறுத்தம் செய்யப்பட்டது.

சுவிட்சர்லாந்தின் பொருளாதார வளர்ச்சிக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து அரசாங்கம் ஆய்வு நடத்தியுள்ளது.

துல்லியமான கணிப்புகளை வழங்க இயலாத அளவுக்கு நிலைமை மிக அதிகமான மாற்றங்களை எதிர்கொள்கிறது அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், தற்போதைய நிலையில் சுவிட்சர்லாந்து, மற்ற நாடுகளை விட மேலும் மோசமாக பாதிக்கப்படவில்லை என்றும் அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது.

உலக பொருளாதாரத்தில் வீழ்ச்சி மற்றும் நாணய மதிப்பின் கடுமையான ஏற்ற இறக்கங்கள் ஆகியவை பொதுவான பின்விளைவுகளாக எதிர்பார்க்கப்படுவதாகவும், 2025ம் ஆண்டுக்கான உள்நாட்டு மொத்த உற்பத்தி (GDP) வளர்ச்சி 1.4% என கணிக்கபட்டிருந்தாலும், அதில் குறைவு ஏற்படக்கூடும் என்றும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

தற்காலிகமாக வேலை இழப்பை சமாளிக்க, “குறுகிய கால வேலை நிவாரணம்” (ILR) என்ற திட்டம் மூலம் தொழிலாளர்களுக்கு உதவ அரசு தயாராக உள்ளது. புதிய வரி விதிப்புகளால் நேரடியாகவோ, மறைமுகமாகவோ பாதிக்கப்படும் நிறுவனங்கள், ILR நிவாரணத்திற்கான தகுதி பெறும் என்று தொழில்துறைச் செயலகம் அறிவித்துள்ளது.

MORE ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ADVERTISEMENT

Contact
info@tamilnews.ch
to advertise here.

LATEST ARTICLES

ADVERTISEMENT

Contact
info@tamilnews.ch
to advertise here.