ஈஸ்டர் தாக்குதல் அதிகாரத்தை கைப்பற்ற நடந்த சதித் திட்டம் – ஜனாதிபதி

Must Read

உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் சம்பவம் அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக நடைபெற்ற சதித் திட்டம் என ஜனாதிபதி அநுரகுமார திஸநாயக்க தெரிவித்துள்ளார்.

2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறன்று இடம்பெற்ற பயங்கர தற்கொலைத் தாக்குதல் இலங்கையின் அரசியல் வரலாற்றில் அதிகாரத்தை கைப்பற்ற ஏவப்பட்ட மிகப்பெரிய சதியாக இருந்தது என ஜனாதிபதி குறிப்பிட்டு;ளாளர்.

பொலன்னறுவையில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

ஆட்சியைக் கைப்பற்றுவதற்காக 2019 ஈஸ்டர் ஞாயிறன்று நாட்டின் வரலாற்றிலேயே நடந்த மிக மோசமான துயரம் அது,” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கடந்த ஐந்து ஆண்டுக்கும் மேலாக ஈஸ்டர் தாக்குதலைப் பற்றிய விசாரணைகள் நடைபெறுவதின் உண்மையான நோக்கம் — அந்த தாக்குதலுக்குப் பின்னால் இருந்த உண்மையான தலைமைத்துவத்தை மறைக்கத்தான் என சுட்டிக்காட்டியுள்ளார்.

“2019 இல் ஆட்சிக்கு வந்த அரசாங்கத்தும் அதன் பிறகு அமைந்த அரசாங்கத்தும் — உண்மையான குற்றவாளிகளை நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லும் எண்ணமே இருக்கவில்லை என  அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

தற்போது தேசிய மக்கள் சக்தி (NPP) தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்த பிறகு, வெறும் ஆறு மாத காலத்துக்குள், பாதிக்கப்பட்டவர்கள் உறுதியான நீதியும், பொறுப்புக்கூறலும் பெறும் வகையில் படிப்படியாக நடவடிக்கை எடுத்து வருவதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

MORE ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ADVERTISEMENT

Contact
info@tamilnews.ch
to advertise here.

LATEST ARTICLES

ADVERTISEMENT

Contact
info@tamilnews.ch
to advertise here.