ஈஸ்டர் தாக்குதல் விசாரணை அறிக்கை சிஐடியிடம் ஒப்படைப்பு!

Must Read

2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறன்று இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணைக் ஆணைக்குழுவின் (PCoI) அறிக்கையை மேலதிக விசாரணைக்காக குற்றப்புலனாய்வு துறையிடம் (CID) ஒப்படைக்குமாறு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தன் செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இந்த விடயம் பற்றி தகவல் வெளியிட்டுள்ளார்.

ஜனாதிபதி செயலாளரால் குற்றப்புலனாய்வு துறைக்கு இந்த ஆணைக்குழு அறிக்கை ஏற்கனவே ஒப்படைக்கப்பட்டுள்ளது. சிஐடி இந்த ஆவணத்தை ஆழமாகவும், தீவிரமாகவும் ஆய்வு செய்யும்” என அவர் தெரிவித்தார்.

ஒப்படைக்கப்பட்ட அறிக்கையின் குறிப்பிட்ட பதிப்பு என்ன என்பது உறுதியாக தெரிவிக்கப்படவில்லை.

ஆனால், இது முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதி ஜனக் டி சில்வா தலைமையில் நடந்த 2019 ஈஸ்டர் தாக்குதல் விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையாக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என அதிகாரபூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

MORE ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ADVERTISEMENT

Contact
info@tamilnews.ch
to advertise here.

LATEST ARTICLES

ADVERTISEMENT

Contact
info@tamilnews.ch
to advertise here.