சுவிஸில் பனிப்பாறை சரிவினால் பாதிப்பு

Must Read

சுவிட்சர்லாந்தின் பனிப்பாறை சரிவினால் பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

சுவிட்சர்லாந்தின் தெற்கு வலாய்ஸ் கான்டனில் கடந்த வியாழக்கிழமை கன பனிப் பொழி ஏற்பட்டுள்ளது.

பனிச்சரிவால் பாதிக்கப்பட்டது காரணமாக, “Great St. Bernard” சுரங்கம் குறைந்தது அடுத்த வெள்ளிக்கிழமை வரை மூடப்பட்டே இருக்கும் என வலாய்ஸ் கான்டன் காவல் துறையின் பேச்சாளர் ஸ்டீவ் லெஜர் தெரிவித்தார்.

Toules பகுதியில் சுரங்க வழித்தடத்தில் பனிச்சரிவு நிகழ்ந்ததை அடுத்து சுரங்கம் கடந்த வெள்ளிக்கிழமை மூடப்பட்டது.

இதேநேரம், Simplon பாஸ் பாதை வெள்ளிக்கிழமை பிற்பகலில் மீண்டும் திறக்கப்பட்டது.

Upper Valais பகுதியில் பல பனிச்சரிவுகள் பதிவாகியுள்ளதாகவும், சனி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் கூடுதல் பனிச்சரிவு அபாயம் அதிகமாக உள்ளதாகவும் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அதோடு, மரங்கள் விழும் அபாயம் தொடர்ந்து நிலவுகிறது என்பதால் பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை வரை காடுகளில் நடந்து செல்லும் விஷயத்தில் தடுப்பு மற்றும் கவனமாக இருக்க காவல் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

ரோன் ஆற்றின் நீர்மட்டம் சாதாரணமாகவே இருப்பதுடன், பக்க நதிகளுக்கான எச்சரிக்கை நிலை தொடர்ந்து செயல்பாட்டிலேயே உள்ளது.

பாதிப்புகளால் புதன்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை காவல் கட்டுப்பாட்டு மையத்திற்கு 4,695 அழைப்புகள் பதிவாகியுள்ளன. இது ஒரு நிமிடத்திற்கு சுமார் 1.5 அழைப்புகள் என்ற அளவுக்கு அதிக அளவில் பதிவாகியிருந்தது.

MORE ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ADVERTISEMENT

Contact
info@tamilnews.ch
to advertise here.

LATEST ARTICLES

ADVERTISEMENT

Contact
info@tamilnews.ch
to advertise here.