பிரபல சிங்கள பௌத்த செயற்பாட்டாளர் மீது துப்பாக்கிச் சூடு

Must Read

 

பிரபல சிங்கள பௌத்த செயற்பாட்டாளர்களில் ஒருவரான டேன் பிரியசாத் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ளட்ளது.

கொலன்னாவ சலமுல்ல பிரதேசத்தில் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

டேன் பிரியசாத்தின் வீட்டில் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

மோட்டார் சைக்கிளில் சென்ற இருவர் 9 மில்லிமீற்றர் துப்பாக்கி பயன்படுத்தப்பட்டுள்ளது.

துப்பாக்கிச் சூட்டில் டேன் பிரியசாத் கொல்லப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு முன்னதாக அறிக்கை வெளியிட்டது.

எனினும் சற்று நேரத்தில் டேன் பிரியசாத் உயிரிழக்கவில்லை எனவும் அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்திக்க மானதுங்க இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.

முஸ்லிம்கள் மீதான தாக்குதல் , காலி முகத் திடல் போராட்டக்காரர்கள் மீதான தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு சம்பவங்களுடன் டேன் பிரியசாத்துக்கு தொடர்பு இருப்பதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

சிங்கள பௌத்த பேரினவாத கொள்கைகளை டேன் பிரியசாத் செயற்படுத்தி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

MORE ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ADVERTISEMENT

Contact
info@tamilnews.ch
to advertise here.

LATEST ARTICLES

ADVERTISEMENT

Contact
info@tamilnews.ch
to advertise here.