சுவிஸில் 30 கிலோ கிராம் எடையுடைய கொக்கெயின் மீட்பு

Must Read

சுவிட்சர்லாந்தில் சுமார் 30 கிலோ கிராம் எடையுடைய போதைப் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்களையும் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

ஒரு வாகனத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 30 கிலோகிராம் கொக்கெயினை கண்டுபிடித்துள்ளதாக சுவிட்சர்லாந்தின் எல்லைப் பாதுகாப்பு மற்றும்  சுங்க அலுவலகம் தெரிவித்துள்ளது.

ரிக்கினோ கான்டன் அதிகாரிகளினால் இந்த சம்பவம் தொடர்பான ஊடக அறிக்கை அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

போதைப் பொருள் சட்டத்தை கடுமையாக மீறியதாக இரு நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களை விசாரணை மேற்கொண்டு கைது செய்துள்ளதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தப் போதைப் பொருட்கள் சுவிட்சர்லாந்தில் விற்பனை செய்ய கொண்டு வரப்பட்டவை அல்ல என அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

MORE ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ADVERTISEMENT

Contact
info@tamilnews.ch
to advertise here.

LATEST ARTICLES

ADVERTISEMENT

Contact
info@tamilnews.ch
to advertise here.