9 C
Switzerland
Wednesday, May 21, 2025

அமெரிக்க பொருளாதாரத்தில் சரிவு

Must Read

கடந்த மூன்று ஆண்டுகளில் முதன்முறையாக 2025ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அமெரிக்க பொருளாதாரம் சற்றே சிறிது வீழ்ச்சியடைந்துள்ளது.

அதிகரித்த இறக்குமதிகள் மற்றும் எதிர்பார்ப்பை விட அதிகமாக உயர்ந்த விலை உயர்வுகள் இந்த சரிவுக்கு காரணமாகியுள்ளன.

அமெரிக்க பொருளாதார ஆய்வகத்தின் (Bureau of Economic Analysis) முன்னிலை மதிப்பீட்டின் படி, 2025ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் அமெரிக்காவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) ஆண்டு அடிப்படையில் 0.3% வீழ்ச்சி கண்டது.

இது, ப்ளூம்பெர்க் நடத்திய ஆய்வில் வல்லுநர்கள் எதிர்பார்த்த 0.2% வீழ்ச்சியை விட அதிகமாகும். 2024ஆம் ஆண்டின் நான்காம் காலாண்டில் பதிவு செய்யப்பட்ட 2.4% வளர்ச்சியுடன் ஒப்பிடும் போது, இந்த வீழ்ச்சி குறிப்பிடத்தக்கதாகும்.

இந்த வளர்ச்சி வீழ்ச்சி, 2022ஆம் ஆண்டின் முதல் காலாண்டிற்கு பிறகு முதல்முறையாக நிகழ்கின்றது.

“வளர்ச்சி காலத்தில் வீழ்ச்சி அரிதாக இருக்கலாம்; ஆனால் அதுவே recession (மந்தநிலை) என்று அர்த்தமல்ல,” என ஒக்ஸ்போர்ட் எகனோமிக்ஸ் Oxford Economics நிறுவனத்தின் தலைமை பொருளியலாளர் ரயன் ஸ்வீட் தெரிவித்துள்ளார்.

இந்த வீழ்ச்சியின் முக்கிய காரணம், 41.3% என்ற அடிப்படையில் பெரிதளவு இறக்குமதிகள் அதிகரித்தமையே என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

டிரம்ப் ஆட்சி திட்டமிட்டிருந்த புதிய வரிவிதிப்புகளை முன்நோக்கிய கம்பனிகள் அதிகளவில் உள்நாட்டு தேவைக்கான பொருட்களை முன்பே இறக்குமதி செய்தன. இதன் விளைவாக, மொத்த தேசிய உற்பத்தி GDP கணக்கீட்டில் இறக்குமதிகள் மறை 5% தாக்கத்தை ஏற்படுத்தின.

இதே நேரத்தில், உள்நாட்டுப் பொருட்கள் விற்பனை 3% வளர்ச்சியுடன் இருந்தது. இது கடந்த காலாண்டில் இருந்த 2.9% வளர்ச்சியைவிட சற்று அதிகம்.

நிறுவனங்கள் வரி அதிகரிப்புக்கு முன் இறக்குமதிகளை அதிகரித்தன எனவும் இருப்புப்பொருட்கள் மிகுந்தளவில் குவிக்கப்பட்டன எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனினும் நுகர்வோர் செலவீன வளர்ச்சி மிதமான அளிவில் காணப்படுகின்றது.

இந்த அறிக்கையில் ஜனவரி முதல் மார்ச் வரையிலான பொருளாதார நிலை மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளது. டிரம்ப் ஏப்ரல் 2 அன்று அறிவித்த புதிய வரி உயர்வுகள் இதில்உள்ளடங்கவில்லை. ஆனால் அவை வருங்கால வளர்ச்சியில் மேலும் எதிர்மறை தாக்கங்களை ஏற்படுத்தலாம் என பொருளாதியலாளர்கள் எச்சரிக்கின்றனர்.

“2025ஆம் ஆண்டில் இந்நேரம் வரை வரிவிதிப்பு பொருளாதாரத்தை பாதித்துவிட்டது, மேலும் இந்த தாக்கம் இந்த ஆண்டு முழுவதும் தொடரும் என எதிர்பார்க்கலாம்,” என பொருளியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்த அறிக்கை வெளியான பின்னர், பங்குசந்தைகள் வீழ்ச்சி கண்டன. S&P 500 சுமார் 0.9%, Nasdaq 1.4%, மற்றும் Dow Jones 0.6% வீழ்ச்சியடைந்தன.

MORE ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

LATEST ARTICLES