சுவிஸில் ஏதிலிகளை மீள்குடியேற்றும் திட்டம் மீள ஆரம்பம்

Must Read

சுவிட்சர்லாந்து அரசு, தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ள ஏதிலிகள் மீள்குடியேற்றத் (Resettlement) திட்டத்தை 2027 ஆண்டு முடிவுவரை மீண்டும் செயல்படுத்தத் தீர்மானித்துள்ளது.

இந்த திட்டத்தின் கீழ், 2026 மற்றும் 2027 ஆண்டுகளில் அதிகபட்சமாக 400 பேரை அகதிகளாக ஏற்கும் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

இதில், முக்கியமாக மத்திய மற்றும் அருகிலுள்ள கிழக்காசியப் பகுதிகளிலும், மத்தியதரைக் கடல் வழியிலும் இருந்து போர் மற்றும் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்டுள்ள மிகவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

2025ஆம் ஆண்டின் இரண்டாம் அரையாண்டில், ஆரம்பமாக 45 அகதிகளை ஏற்கும் திட்டத்தை, மாநிலங்கள், நகரங்கள் மற்றும் உள்ளூராட்சி அமைப்புகளின் கருத்துக்கணிப்பின் அடிப்படையில் சுவிட்சர்லாந்து நீதித்துறை மற்றும் காவல் அமைச்சகம் செயல்படுத்த உள்ளது.

 அதன்பின்னர், 2026 மற்றும் 2027 ஆண்டுகளில் வருடத்திற்கு 400 பேர் வரை மீள்குடியேற்ற வாய்ப்பு உருவாக்கப்பட உள்ளது.

இந்த திட்டம், சுவிட்சர்லாந்தின் அகதி முறைமை கடந்த மூன்று ஆண்டுகளில் கடுமையாக அழுத்தத்திற்குள்ளானதைத் தொடர்ந்து, 2023ஆம் ஆண்டு இடைநிறுத்தப்பட்டது.

MORE ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ADVERTISEMENT

Contact
info@tamilnews.ch
to advertise here.

LATEST ARTICLES

ADVERTISEMENT

Contact
info@tamilnews.ch
to advertise here.