சுவிஸில் தொலைத்தொடர்பு கண்காணிப்பு இருமடங்காக உயர்வு

Must Read

2024ஆம் ஆண்டில் சுவிட்சர்லாந்தில் தொலைத்தொடர்பு கண்காணிப்புகள் கடந்த ஆண்டை விட இருமடங்காக அதிகரித்துள்ளன என அந்நாட்டு அஞ்சல் மற்றும் தொலைத்தொடர்பு கண்காணிப்பு சேவை (PTSS) தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், சுவிட்சர்லாந்தின் புலனாய்வு அமைப்பான Federal Intelligence Service (FIS) மற்றும் சட்ட அமலாக்க பிரிவுகள், அதிக எண்ணிக்கையிலான கண்காணிப்பு உத்தரவுகளை பிறப்பித்துள்ளன.

இவை ஒரு குறிப்பிட்ட இடத்தில், குறிப்பிட்ட காலத்தில் செயல்பட்ட தொலைதொடர்பு கோபுரங்கள் (cell towers) மூலம் நிகழ்ந்த அனைத்து தொலைத்தொடர்பு மற்றும் அணுகலைத் திரும்பிப் பார்க்கும் வகையானவை.

மேலும், நிகழ்நேர கண்காணிப்பு, அவசர தேடல்கள் போன்றவை பெரிதும் அதிகரித்துள்ளன.

43% கண்காணிப்புகள் சொத்து குற்றங்களுக்கு தொடர்புடையவை – இது கடந்த ஆண்டைவிட மூன்று மடங்கு அதிகமாகும்.

உயிர்க்கும் உடலுக்கும் எதிரான குற்றங்கள் தொடர்பான கண்காணிப்புகள் இருமடங்காக உயர்ந்துள்ளன.

மருந்து சட்ட மீறல்கள் தொடர்பான கண்காணிப்புகளும் 15% உயர்ந்துள்ளன.

2024 முதல், ஒவ்வொரு கண்காணிப்புக்கும் தனித்தனியாக கட்டணம் வசூலிக்காமல், மொத்தத் தொகை மூலம் செலவீனங்கள் வழங்கப்படுகிறது.

FIS அல்லது காவல்துறை முக்கியமான குற்றங்களை விசாரிக்கும் போது மட்டுமே கண்காணிப்பு உத்தரவு பெற முடியும்.

இது கடைசி முயற்சியாக மட்டுமே மேற்கொள்ளப்படுகிறது, மேலும் அரசியல், பாதுகாப்பு, நீதித்துறை அமைச்சர்களின் ஒப்புதல் அவசியமாகும்.

2024ல், FIS 106 கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது, கடந்த ஆண்டு இதே எண்ணிக்கை 46 ஆக இருந்தது.

MORE ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ADVERTISEMENT

Contact
info@tamilnews.ch
to advertise here.

LATEST ARTICLES

ADVERTISEMENT

Contact
info@tamilnews.ch
to advertise here.