சுவிட்சர்லாந்தில் வீட்டு விலைகள் அதிகரிப்பு

Must Read

சுவிட்சர்லாந்தில் வீட்டு விலைகள் தொடர்ந்து அதிகரித்து செல்வதாக மத்திய புள்ளிவிபரவியல் திணைக்களம்  (Federal Statistical Office – FSO) தெரிவித்துள்ளது.

2025 ஆம் ஆண்டின் கடைசி காலாண்டில், வீட்டு விலை முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது 4.1% உயர்ந்துள்ளது.

அதே நேரத்தில், முந்தைய மூன்று மாதங்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது 0.7% உயர்வு பதிவாகியுள்ளது.

அண்மையில் வெளியிடப்பட்டுள்ள வீட்டு சொத்து விலை குறியீட்டு (Residential Property Price Index – RPI) தற்போதைய நிலை 121.1 புள்ளிகள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மத்திய புள்ளிவிபரவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்த புள்ளிவிபரம் சுவிட்சர்லாந்தின் 28 பெரிய உத்தியோகபூர்வ வீட்டு கடன் நிறுவனங்களின் தரவுகளின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிறுவனங்கள் பெரும்பாலான சொத்து வாங்குதல்களை வங்கிக் கடன் (mortgage) மூலம் வழங்குவதால், இந்த கணிப்பு சந்தையின் பெரும் பகுதியை பிரதிபலிக்கின்றது.

சுவிட்சர்லாந்தின் வீட்டு வசதிக்கான தட்டுப்பாடு தொடர்பான கவலைகள் தொடர்ந்து உயர்வடைவதை இந்த புள்ளிவிபரங்கள் உறுதிப்படுத்துகின்றன.

MORE ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ADVERTISEMENT

Contact
info@tamilnews.ch
to advertise here.

LATEST ARTICLES

ADVERTISEMENT

Contact
info@tamilnews.ch
to advertise here.