காசாவை முழுமையாக கைப்பற்ற தாக்குதல் நடத்தப்படும் – இஸ்ரேல்

Must Read

இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சரவையின் ஒப்புதலுக்குப் பிறகு, காசா பகுதியை முழுமையாக கைப்பற்றும் நோக்கில் விரிவாக்கப்பட்ட இராணுவ நடவடிக்கையை இஸ்ரேல் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாக பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு தெரிவித்துள்ளார்.

இந்த நடவடிக்கையின் போது காசா மக்களை தெற்கே இடம்பெயர்த்துச் செல்ல வைக்கும் திட்டமும் கொண்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

“இது ஒரு ‘வந்து செல்வது’ மாதிரியான நடவடிக்கை அல்ல. நாங்கள் நிலத்தை பிடித்து, பாதுகாப்பாக வைத்துக்கொள்வோம். பின்னர் மட்டும் அதிலிருந்து வெளியேறுவோம் என்று யாரும் நினைக்க வேண்டாம்,” என்று நேதன்யாகு கூறியுள்ளார்.

பாதுகாப்பு அமைச்சரவையின் ஒப்புதலுடன் “Operation Gideon’s Chariots” என பெயரிடப்பட்டுள்ள இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்குகள்:

  • ஹமாஸ் அமைப்பை அழித்தல்
  • சிறையில் உள்ள இஸ்ரேல் பணயக் கைதிகளை விடுவிப்பு
  • காசா பகுதியில் பாதுகாப்பை  நிலைநிறுத்தல்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இந்த மாத நடுப்பகுதியில் இஸ்ரேலுக்கு விஜயம் செய்ய உள்ளார், அதன் பின்னர் நடவடிக்கையைத் தொடங்கும் வாய்ப்பு உள்ளது எனவும், அந்த நேரம் வரை வழிவகுக்கும் வகையில் நேரடி ஒப்பந்தத்திற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என இஸ்ரேலிய உயர் அதிகாரி ஒருவர் தொரிவித்துள்ளார்.

பொருளாதார அமைச்சர் பெசலேல் ஸ்மோட்ரிச், “இப்போது நாங்கள் காசா பகுதியை முழுமையாக கைப்பற்றப் போகிறோம். ஒரு தடவை நாங்கள் உள்ளே நுழைந்தவுடன், எதற்காகவும் வெளியே வரப்போவதில்லை,” என கூறியுள்ளார்.

எனினும், பயணயக் கைதிகளின் குடும்பங்கள், இஸ்ரேலின் இந்த நடவடிக்கைகள் அவர்களது உயிர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் எனக் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

முதல் முக்கியக் குறிக்கோள் – பிடிக்கப்பட்டோரின் மீட்பு. அதன் பிறகு ஹமாஸ் அமைப்பின் வீழ்ச்சி என இஸ்ரேலின் இராணுவ பேச்சாளர் எப்பி டெப்ரின் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் காசா மீது தடைகளை விதித்துள்ளமை தற்போது சர்வதேசம் முழுவதும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.

இந்த நடவடிக்கைகள் எதிர்காலத்தில் காசா மக்களுக்கு ஒரு மிகப்பெரிய மனிதாபிமான பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என சர்வதேச சமூகம் கவலை வெளியிட்டுள்ளது.

MORE ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ADVERTISEMENT

Contact
info@tamilnews.ch
to advertise here.

LATEST ARTICLES

ADVERTISEMENT

Contact
info@tamilnews.ch
to advertise here.