இந்தியாவின் 25 ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் அறிவிப்பு

Must Read

இந்தியாவின் 25 ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையே ஏற்பட்டுள்ள புதிய எல்லைப் பதற்றம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது.

இந்திய தாக்குதலால் பொதுமக்கள் தான் பலியதான முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது எனினும் இந்த தாக்குதல்களில் இராணுவ வீரர்களும் உள்ளடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எல்லை பகுதிகளில் பொதுமக்கள் அதிக அளவில் வெளியேற்றப்பட துவங்கியுள்ளனர்.

முக்கியமான எல்லை நகரங்களில் இரவில் விளக்குகளை அணைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

லாஹோர் நகரில், இன்று அதிகாலையில் வெடிப்பு சத்தம் கேட்டதையடுத்து மக்கள் பதற்றத்தில் எழுந்தனர். “அடுத்த 24 மணி நேரத்தில் நாடு எங்கு போகும் என்று யாருக்கும் தெரியவில்லை” என பொதுமக்கள் அச்சத்துடன் தெரிவித்துள்ளனர்.

இந்துஸ் நீர் உடன்படிக்கை (Indus Waters Treaty) இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையில் நீண்டகாலமாக நடைமுறையில் உள்ள முக்கியமான நீர்ப்பங்கீட்டு ஒப்பந்தம் ஆகும்.

இந்த உடன்படிக்கையின் நிலைமை பற்றிய உலகளாவிய கவலை உருவாகியுள்ளது.

அதிக மக்களின் வாழ்வாதாரம் இந்த ஒப்பந்தத்தில் தங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உலக நாடுகள் உடனடியாக தலையீடு செய்யாவிட்டால், இந்த அணுஆயுத சக்திகள் இடையிலான முரண்பாட்டு நிலைமை கட்டுப்பாட்டை இழக்கலாம் என அச்சம் வெளியிடப்படுகிறது.

இந்தக் சூழ்நிலையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி, முக்கிய அமைச்சர்களுடன் உயர் மட்ட அவசர ஆலோசனை நடத்தினார்.

“தேசிய பாதுகாப்பு, செயல்பாட்டு தயார் நிலை மற்றும் குடிமக்களின் பாதுகாப்பு குறித்து உறுதியுடன் செயல்பட முடிவு செய்யப்பட்டிருக்கிறது” என பிரதமரின் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அனைத்து அமைச்சுகளும், தற்போதைய நிலைமைக்கு ஏற்ற வகையில் தங்களது செயல்திட்டங்களை தயாரித்து, செயலாக்கத் துடிப்பில் உள்ளன என்று தெரிவிக்கப்பட்டது.

MORE ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ADVERTISEMENT

Contact
info@tamilnews.ch
to advertise here.

LATEST ARTICLES

ADVERTISEMENT

Contact
info@tamilnews.ch
to advertise here.