புதிய பாப்பாண்டவரை தேர்வு செய்யும் வாக்களிப்பு தொடர்கிறது

Must Read

புதிய பாப்பாண்டவரை தேர்வு செய்யும் கார்டினல்கள் இன்று மாலை 4.30க்கு (உள்ளூர் நேரம்) சிஸ்டைன் தேவாலயத்தில் மீண்டும் கூடியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நான்காவது தடவையாக பாப்பாண்டவர் தெரிவிற்கான வாக்கெடுப்பு நடத்தப்படுகின்றது.

இந்த வாக்கில் ஒரு பாப்பாண்டவரை தேர்ந்தெடுத்தால், சுமார் மாலை 5.30க்கு வெள்ளை புகை வெளியேறும் வாய்ப்பு உள்ளது.

பாப்பாண்டவர் பெனடிக்ட் XVI 2005ஆம் ஆண்டு இவ்வாறு நான்காவது வாக்கில் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது நினைவில் கொள்ளத்தக்கது.

இல்லையெனில், ஐந்தாவது வாக்குப் பரிசீலனை முடியும் நேரமான சுமார் மாலை 7 மணிக்கு, வெள்ளை அல்லது கருப்பு புகை வெளிப்படும்.

எனினும், இவை அனைத்தும் கணிப்பு நேரங்கள் மட்டுமே. நேரம் விரைவாகவோ அல்லது தாமதமாகவோ இருக்கலாம்.

முடிவை எடுப்பது 133 கார்டினல்களே என்பதால், அனைத்தும் அவர்களது கைகளில்தான் உள்ளது.

முன்னதாக, பிற்பகல் வரையில் முன் நடைபெற்ற மூன்று வாக்குகளிலும் ஒரு முடிவும் எட்டப்படவில்லை.

அதன் அடையாளமாக கருப்பு புகை சிஸ்டைன்  தேவாயலத்தின் புகைபோக்கி வழியாக வெளியேறியது. அதன்பின் கார்டினல்கள் மதிய உணவு இடைவேளைக்கு சென்றனர்.

இன்றைய பிற்பகல் மற்றும் மாலைக்குப் பின் மேலும் இரண்டு வாக்குகள் நடைபெற உள்ளன.

கடந்த ஐந்து பாப்பாண்டவர்கள் மூவர் இரண்டாவது நாளில் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தாலும், இந்த முறை அதிக எண்ணிக்கையிலான கார்டினல்கள் வாக்களிப்பதால், தேர்வு நடைமுறை சிக்கலாக மாறியிருக்கிறது.

MORE ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ADVERTISEMENT

Contact
info@tamilnews.ch
to advertise here.

LATEST ARTICLES

ADVERTISEMENT

Contact
info@tamilnews.ch
to advertise here.