லாகூருக்கான விமானப் பயணங்களை ரத்து செய்த ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ்

Must Read

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான நிலவரம் தொடர்ந்து பதற்றமடைந்து வரும் நிலையில், ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம், பாகிஸ்தானின் லாகூர் நகருக்கான அனைத்து விமான சேவைகளையும் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில்  தற்காலிகமாக இடைநிறுத்துவதாக அறிவித்துள்ளது.

லாகூர் விமானங்கள் மறு அறிவித்தல் வரையில் இடைநிறத்தப்படுவதாகவும்,   கராச்சி நகரத்துக்கு செல்லும் விமானங்கள் வழமைபோல் இயக்கப்படும் எனவும் ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் தெரிவித்துள்ளது.

இந்த நடவடிக்கை, இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே நிலவும் அதிகரித்துவரும் பாதுகாப்பு பதற்றங்களை ஒட்டிய வகையில் எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இது, தெற்காசிய விமானப்பாதைகளில் பல்வேறு இடையூறுகளையும் உருவாக்கியுள்ளது.

லாகூர் நோக்கி முன்பே விமானங்கள் முன்பதிவு செய்துள்ள பயணிகள், தங்கள் பயண திட்டங்களை மாற்றிக்கொள்வதற்கும், பணத்தை மீளப்பெற்றுக்கொள்வதற்கும் ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸுடன் நேரடியாக தொடர்புகொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

MORE ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ADVERTISEMENT

Contact
info@tamilnews.ch
to advertise here.

LATEST ARTICLES

ADVERTISEMENT

Contact
info@tamilnews.ch
to advertise here.