பயிற்சி ஹெலிகாப்டர் விபத்து – 6 பாதுகாப்புப் படையினர் உயிரிழப்பு

Must Read

இன்று காலை இலங்கை விமானப்படையின் Bell 212 ஹெலிகாப்டர் ஒன்று மதுரு ஒயா நீர்த்தேக்கத்தில் பயிற்சியின் போது விபத்துக்குள்ளாகி ஆறுபேர் உயிரிழந்துள்ளனர் என அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவ் விபத்து, மதுரு ஒயா சிறப்பு படை பயிற்சி நிலையத்தில் நடைபெற்ற பாஸிங் அவுட் நிகழ்ச்சிக்கு அமைய நடத்திய பயிற்சி நடவடிக்கையின் போது ஏற்பட்டது.

முதற்கட்ட தகவல்களின்படி, விபத்துச் சமயத்தில் ஹெலிகாப்டரில் 12 பாதுகாப்புப் படையினர் இருந்துள்ளனர். இவர்களில் இரு விமானப்படை பைலட்டுகள் உட்பட, இலங்கை விமானப்படை மற்றும் இராணுவ சிறப்பு படையினர் பயணித்துள்ளனர்..

விபத்தின் பின் அனைவரும் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டாலும், அவர்களில் ஆறு பேர் பொலன்னறுவை வைத்தியசாலையில் உயிரிழந்தனர்.

இறந்தவர்களில் இலங்கை விமானப்படையின் 2 கன்னர்கள் மற்றும் 4 சிறப்பு படையினர் அடங்குகின்றனர்.

இந்நிலையில், இந்த விபத்தை விசாரணை செய்ய 9 உறுப்பினர்களைக் கொண்ட விசேட குழுவொன்றை விமானப்படைத் தளபதி நியமித்துள்ளார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

MORE ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ADVERTISEMENT

Contact
info@tamilnews.ch
to advertise here.

LATEST ARTICLES

ADVERTISEMENT

Contact
info@tamilnews.ch
to advertise here.