இங்கிலாந்தில் விமானியின் தவறினால் விமானத்தில் ஏற்பட்ட தீ விபத்து

Must Read

பிரிட்டிஷ் எயார்வேஸ் British Airways நிறுவனத்தின் விமானம் BA2279, புறப்படுவதற்கு முற்பட்ட போது தீ விபத்தில் சிக்கியமை தொடர்பான விசாரணை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் விமானி தன்னுடைய இடது மற்றும் வலது கைகளை குழப்பி தவறான இயக்கத்தை செய்ததன் விளைவாக ஏற்பட்டது என அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விமானம் கடந்த 2024 ஜூன் 28ஆம் திகதி லண்டன் கேட்விக் விமான நிலையத்திலிருந்து கனடாவின் வான்கூவர் நோக்கி புறப்படவிருந்தது.

ஆனால், புறப்படும் நேரத்தில், இணை பைலட் தன்னுடைய இடது கையை இயக்க வேண்டிய இடத்தில் தவறாக அதை ஈர்க்காமல் வலது கையை இயக்கி தள்ளியதால் விமான இயக்கத்தில் பெரும் குழப்பம்

“பறப்பிற்குள் விமானத்தினை மேலெழுப்பும் முயற்சியில் இணை பைலட் இடது கையை சரியாக இயக்க வேண்டிய இடத்தில், தவறாக வலது கையை இயக்கியதால் ‘ஆக்‌ஷன் ஸ்லிப்’ ஏற்பட்டது” என இது தொடர்பான விசாரணையை மேற்கொண்ட ஏர் ஆக்சிடெண்ட் இன்வெஸ்டிகேஷன் பிராஞ்ச் (AAIB) தனது அறிக்கையில், தெரிவித்துள்ளது.

இந்த தவறான இயக்கம் பறப்பை ரத்துசெய்யும் நிலைக்கு அழைத்துச் சென்றதுடன், அதிவேகத்தில் அவசர நிறுத்தம் செய்யவேண்டிய சூழ்நிலையை உருவாக்கியது. விமானம் மணிநேரத்திற்கு 190 மைல்கள் வேகத்தில் இருந்த நிலையில், அவசர முறையில் நிறுத்தப்பட்டதால் வலது பக்க முக்கிய கியர் பகுதியில் தீப்பற்றியது.

விமான நிலையத்தின் தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இந்த சம்பவத்தால் கேட்விக் விமான நிலையத்தின் முக்கிய தரையிறக்கம் பாதை (main runway) தற்காலிகமாக மூடப்பட்டது. இதனால் 16 விமானங்கள் வேறு இடத்திற்கு திருப்பப்பட்டன, மேலும் 23 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

சம்பவத்தின் போது 347 பயணிகள் மற்றும் ஊழியர்கள் விமானத்தில் இருந்தும், யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும், இது விமானபாதுகாப்பு துறையின் கவனத்தை பெற்ற சம்பவமாகி, விரிவான விசாரணைக்கு வழிவகுத்தது.

தனக்கு 6,000 மணி நேரத்துக்கும் மேல் பறக்கும் அனுபவம் உள்ளதாக தெரிவித்த இணை விமானி, சம்பவ நேரத்தில் “நன்றாக ஓய்வெடுத்து இருந்தேன், உடல்நிலை நலமா இருந்தது, ஏன் இது நடந்தது என தெரியவில்லை” என்றும் கூறியுள்ளார்.

MORE ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ADVERTISEMENT

Contact
info@tamilnews.ch
to advertise here.

LATEST ARTICLES

ADVERTISEMENT

Contact
info@tamilnews.ch
to advertise here.