சுவிட்சர்லாந்தில் “எங்கள் வேலைக்கு மரியாதை தேவை” என்ற கருப்பொருளின் கீழ் பணியாளர்கள் சனிக்கிழமை சம்பள உயர்வு மற்றும் குடும்பத்திற்கு ஏற்ற வேலை நேரங்களை கோரி எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கட்டுமான துறையில் தற்போதுள்ள தேசிய வேலைநிலை ஒப்பந்தம் 2025 இறுதியில் காலாவதியாகும் என்ற நிலையில்ழ இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
புதிய ஒப்பந்தத்தை உருவாக்கும் பேச்சுவார்த்தைகள் எளிதாக இருக்காது என தொழிற்சங்கங்கள் எச்சரித்துள்ளன.
பல்வேறு தொழிற்சங்கங்கள் கூட்டாக இணைந்து இந்தப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
லிமாடிகுவாயிருந்துஹெல்வெட்யபிளாட்ஸ் வரை நகரின் மையப்பகுதியில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டதால், பல டிராம் பாதைகள் பாதிக்கப்பட்டன.
இதேபோன்று, Lausanne நகரிலும் மாலை நேரத்தில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.