அமெரிக்க உற்பத்திகளை புறக்கணிப்பதற்கு சுவிட்சர்லாந்து மக்கள் விரும்புகின்றனர் என புதிய ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது.
அமெரிக்கா விதித்த வரிகள் மற்றும் வர்த்தகக் கொள்கைகளுக்கு எதிர்ப்பாக, சுவிஸ் மற்றும் ஐரோப்பிய நுகர்வோர் பெரும்பான்மையாக அமெரிக்க தயாரிப்புகளை வாங்க மறுக்கத் தயாராக உள்ளனர் என புதிய ஆய்வு ஒன்று வெளிப்படுத்தியுள்ளது.
YouGov நிறுவனம், ஆன்லைன் விற்பனைத் தளம் Galaxus-க்காக மேற்கொண்ட இந்த ஆய்வு, சுவிஸ், ஜெர்மனி, ஆஸ்திரியா, பிரான்ஸ் மற்றும் இத்தாலியில் நடந்தது.
இந்த ஆய்வில் 1,034 பேர் சுவிட்சர்லாந்திலிருந்து பங்கேற்றனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
சுவிஸ் நுகர்வோரில் 54% பேர், அமெரிக்க தயாரிப்புகளை புறக்கணிக்கத் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
சுவிஸ் மக்களில் 70% பேர் அமெரிக்க உணவுப் பொருட்களுக்கு பதிலாக ஐரோப்பிய உணவுகளை விரும்புகிறார்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
குறிப்பாக மூத்த வயதினர் இந்த நடைமுறையில் அதிக உறுதிபாட்டை வெளிப்படுத்தியுள்ளனர்.
இந்த ஆய்வு, டிரம்ப் நிர்வாகத்தின் வரி கொள்கைகளுக்கு எதிரான ஐரோப்பிய நுகர்வோர் எதிர்வினையை வெளிப்படுத்துவதோடு, உள்நாட்டு மற்றும் ஐரோப்பிய தயாரிப்புகளுக்கான ஆதரவு அதிகரித்து வருவதையும் காட்டுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.