அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடனுக்கு புரஸ்டேட் புற்றுநோய் (prostate cancer) உறுதிசெய்யப்பட்டுள்ளதாக அவரது அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நோய் தற்போது எலும்புகளுக்கும் பரவியுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“கடந்த வாரம், ஜோ பைடன் சிறுநீர் தொடர்பான தீவிரமான அறிகுறிகளால் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டபோது, புரஸ்டேட் புற்றுநோய் கட்டி (nodule) கண்டறியப்பட்டது.
அதனைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை மேற்கொண்ட மேலும் பரிசோதனையில், புற்றுநோய் Gleason Score 9 (Grade Group 5) எனும் அதிக ஆக்கிரமிப்பு தன்மை கொண்டதாகவும், அது எலும்புகளுக்கும் பரவியுள்ளதாகவும் உறுதி செய்யப்பட்டது,” என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இது மிக ஆக்கிரமிக்கும் வகை புற்றுநோயாக இருந்தாலும், அது ஹார்மோன்களுக்கு செவிவைக்கும் தன்மை கொண்டதால், சிகிச்சை மூலம் பராமரிக்க சாத்தியம் உள்ளதாகவும் அறிக்கை தொடர்ந்தது.
82 வயதான பைடனும் அவரது குடும்பமும் தற்போது சிகிச்சை தொடர்பில் மருத்துவர்களுடன் ஆலோசித்து வருகிறார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புரஸ்டேட் புற்றுநோய் வயதுடன் அதிகரிக்க கூடியது என்றும், “அதிகவயதான ஆண்களில் பெரும்பாலும் சிறிய புற்றுநோய் உயிரணுக்கள் காணப்படுவது சாதாரணம்,” என ஆர்லாண்டோ மருத்துவமனையின் சிகிச்சை நிபுணரும், மத்திய பல்கலைக்கழகத்தின் மருத்துவக் கல்லூரியின் உதவிப் பேராசிரியருமான டாக்டர் ஜமின் பிராம்பாட்ட் தெரிவித்தார்.