இலங்கையில் உப்பு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பற்றாக்குறை காரணமாக நாட்டில் உப்பின் விலையும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதுவரை காலமும் ஒரு பக்கட் உப்பு சுமார் 60 ரூபாய் விற்பனை செய்யப்பட்டதாகவும் தற்பொழுது 400 முதல் 500 ரூபாய் வரையில் உப்பு விற்பனை செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சீரற்ற காலநிலை காரணமாக உப்பு உற்பத்தியில் ஏற்பட்ட பாதிப்புகள் தான் இவ்வாறு உப்பிற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என அரசாங்க தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
குப்பையை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அண்மையில் அனுமதி வழங்கி இருந்தது.
உப்பு இறக்குமதி செய்யும் வரையில் நாட்டில் உப்பு வகைகளுக்கு தட்டுப்பாடு நிலவி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
அதிகளவு உப்பை கொள்வனவு செய்து களஞ்சியப்படுத்துவதனால் சாதாரண பொதுமக்களின் நுகர்விற்கு சந்தையில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை உப்பு தட்டுப்பாடு விரைவில் தீர்க்கப்படும் என அரசாங்கம் உறுதி மொழியை வழங்கியுள்ளது.