சீனப் பெண்களை சட்டவிரோதமான முறையில் சுவிட்சர்லாந்திற்குள் மனித கடத்தல் மேற்கொண்டு அவர்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய ஐந்து பேர் சு கைது செய்யப்பட்டுள்னர்.
பெர்ன் மாகாண போலீசார் நடத்தி வந்த நீண்டகால விசாரணையின் மூலம், சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சீனாவிலிருந்து சுமார் 100க்கும் மேற்பட்ட பெண்களை சட்டவிரோதமான முறையில் கடத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
146 சீன பெண்களை சுவிட்சர்லாந்துக்கு வலுக்கட்டாயமாக அழைத்து வந்து, அவர்களை வெளியே செல்ல முடியாது அச்சுறுத்தி அடைத்துவைத்து, அவர்களது சம்பளத்தின் பாதியை எடுத்துக் கொண்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அவர்கள் நிரந்தரமாக வசிப்பதற்காக வாடகைக் குடியிருப்புகளில் அடைக்கப்பட்டிருந்தனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
முழுமையான குற்றப்பத்திரிகைகள் தயாரிக்கப்பட்ட பின்னர் மேலும் விபரங்களை வெளியிடுவோம் என பெர்ன் கான்டன் நிர்வாகம் அறிவித்துள்ளது.
2008ஆம் ஆண்டு முதல் பெர்ன் மாகாணத்தில் 41 மனிதக் கடத்தல் வழக்குகள் தொடர்பாக குற்றவியல் தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. பெரும்பாலான வழக்குகள் பாலியல் சுரண்டலை மையமாகக் கொண்டவையாக காணப்படுகின்றன.