அரசியலியல் அதிகாரத்தைப் பெறுவதற்கும், பாதுகாப்பதற்கும் சிலர் உண்டாக்கிய போர், இந்த நாட்டின் மக்களை துன்புறுத்திய ஒரு பேரழிவாக இருந்தது” என்று ஜனாதிபதி அனுர குமாரா திசாநாயக்க இன்று தெரிவித்தார்.
16வது தேசிய போர் வீரர் நினைவு தின நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி, “இப்போது அதிகாரத்திற்காக வடபகுதியிலும் தென்பகுதியிலும் இனவெறி மீண்டும் தலைதூக்கும் அபாயகரமான சூழ்நிலை உருவாகியுள்ளது” என எச்சரித்தார்.
“போர் என்பது இயற்கையான ஒன்று அல்ல. அது சிலரால் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட ஒன்றாகும். அதிகாரத்திற்காக, அந்த அதிகாரத்தை நிலைநிறுத்துவதற்காகவே போருக்கு பின்னணி அமைக்கப்பட்டது,” என அவர் கூறினார்.
இனவெறியையோ ஊக்குவிக்காத பெற்றோர்களின் பிள்ளைகள், சிலர் தங்கள் அதிகாரப் போராட்டங்களுக்காக உயிரிழக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டதாகவும் ஜனாதிபதி வேதனை தெரிவித்தார்.
போர் என்பது ஒரு பேரழிவாகவும், அழிக்கின்ற சக்தியாகவும் இருப்பதாகக் கூறிய ஜனாதிபதி, இனி ஒருபோதும் அந்தவகையான போர் மீண்டும் தோன்றாதவாறு தடுப்பது அரசாங்கத்தின் முக்கிய பொறுப்பாகும் எனக் கூறினார்.
“நாட்டில் நிலையான சமாதானத்திற்காக அனைவரும் உறுதியுடன் செயல்பட வேண்டும்,” என அவர் அழைப்பு விடுத்தார்.
போரில் வெற்றி பெற்றபின்னும் இலங்கை இன்னும் முழுமையான சுதந்திரத்தைப் பெறவில்லை என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார். “நாம் பொருளாதார சுதந்திரத்தை இழந்துள்ள ஒரு நாடாகவே இருக்கின்றோம்,” எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
முழுமையான சுதந்திரத்தை அனுபவிக்க, சட்டத்தின் ஆட்சி நிலைநிறையவேண்டியது, குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் மாபெரும் பிரச்சனைகளிலிருந்து விடுபடவேண்டியது அவசியமாகும்,” என ஜனாதிபதி அனுர குமாரா திசாநாயக்க வலியுறுத்தினார்.