அமெரிக்க தூதுவர் ஜூலி சாங்கின் பெயரில் பல போலி Facebook கணக்குகள் உருவாக்கப்பட்டுள்ளதால், அவற்றில் பகிரப்படும் எந்தவொரு தகவலையும் நம்ப வேண்டாம் என பொதுமக்களுக்காக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.
தூதரகத்தின் அதிகாரப்பூர்வ அறிக்கையிலின்படி, தூதுவர் ஜூலி சாங் தனது அதிகாரப்பூர்வ செய்திகள் மற்றும் தகவல்களை X (முன்னர் Twitter) தளத்தின் வழியே மட்டுமே பகிர்கிறார்.
அவருக்கு Facebook, Instagram, அல்லது Telegram போன்ற தளங்களில் எந்தவொரு கணக்கும் இல்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்க தூதரகத்தினால் வழங்கப்படும் சரியான மற்றும் புதுப்பிக்கப்பட்ட தகவல்களுக்காக பொதுமக்கள் கீழ்காணும் அதிகாரப்பூர்வ கணக்குகளை அணுகலாம்:
தூதுவர் ஜூலி சந்தின் X (Twitter) கணக்கு – @USAmbSL
அமெரிக்க தூதரகத்தின் X (Twitter) கணக்கு – @USEmbSL
Instagram கணக்கு – @USEmbSL
Facebook பக்கம் – facebook.com/Colombo.USEmbassy
பொதுமக்கள் சமூக ஊடகங்களில் காணப்படும் போலி கணக்குகளை நம்பி தவறான தகவல்களை பின்பற்றுவதிலிருந்து விலகி, தூதரகத்தின் உண்மை கணக்குகளை மட்டுமே அணுகுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.