சுவிட்சர்லாந்து வலேஸ் கான்டனில் உள்ள டாஷ் அருகே உள்ள ஆல்வுபெல் (Alphubel) மலைப்பகுதியில் சனிக்கிழமை ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி இரண்டு ஸ்கீ மலையேறிகள் உயிரிழந்தனர்.
விபத்து குறித்து வலேஸ் கான்டன் காவல் துறை அறிவித்துள்ளது.
மலையில் ஏற்பட்ட பெரும் பனிச்சரிவில் சிக்கிய இரண்டு ஆண்களும் அதே இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்தபோதும், அவர்கள் உயிரிழந்ததை மட்டுமே உறுதிப்படுத்த முடிந்தது.
இவர்கள் காலையில் டாஷ் குடிலில் இருந்து புறப்பட்டு ஆல்வுபெல் சிகரத்தை நோக்கி சாகச பயணமாக சென்றிருந்தனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர்களின் அடையாளம் பற்றிய விபரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.
மேலதிக விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இது போன்ற பனிச்சரிவுகள் அப்பகுதியில் மிக ஆபத்தானவை என்பதால், சாகச பயணிகள் பாதுகாப்பு உபகரணங்களுடன் பயணிக்க வேண்டும் என அதிகாரிகள் எச்சரிக்கின்றனர்.