இலங்கையில் மிகவும் சர்ச்சைக்குரிய பௌத்த பிக்குகளில் ஒருவராக கருதப்படும் அம்பிட்டிய சுமணரதன தேரர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு சிறி மங்களாராமய விஹாரையின் விஹாராதிபதியான சுமணரதன தேரர், இன்றைய தினம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
உஹன பொலிஸ் நிலையத்தில் குழப்பம் விளைவித்தார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படயில் சுமணரதன தேரர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாடசாலை செல்லும் சிறுவர்களை ஏற்றிசென்ற முச்சக்கர வண்டி பாதுகாப்பு ஒழுங்கு விதிகளை பின்பற்றத் தவறியதாக குற்றம் சுமத்தி சாரதியை பொலிஸார் கைது செய்திருந்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டதனை எதிர்த்து சுமணரதன தேரர் பொலிஸ் நிலையத்தில் கலகம் விளைவித்தார் என தெரிவிக்கப்படுகின்றது.
சுமணரதன தேரர் கடந்த காலங்களில் பல்வேறு சர்ச்சைக்குரிய சம்பவங்களுடன் தொடர்புபட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.