19.9 C
Switzerland
Friday, June 20, 2025

இஸ்ரேல் தூதரக ஜோடியின் உருக்கமான காதல் கதை

Must Read

உலகின் இரு வெவ்வேறு பாகங்களில் பிறந்த யாரோன் லிஷின்ஸ்கி மற்றும் சாரா மில்கிரிம், இருவரும் தங்களது வாழ்க்கைப் பாதையில் இடைமுகமாக இஸ்ரேலிய தூதரகத்தைத் தேர்வு செய்தனர்.

இஸ்ரேலின் வாஷிங்டன், DC தூதரகத்தில் பணிபுரிந்து கொண்டிருந்தபோது அவர்கள் ஒருவரை ஒருவர் நேசிக்கத் தொடங்கினர். ஆனால் அந்த காதல் கதை ஓர் பெருந்துயரச் சம்பவமாக மாறிவிட்டது.

புதன்கிழமை மாலை, Capitol Jewish Museum நிகழ்வொன்றில் பங்கேற்று வெளியே வந்தபோது, யாரோன் (30) மற்றும் சாரா (26) மீது ஒரு ஆயுததாரி துப்பாக்கிச் சூடு நடத்தியதில் இருவரும் உயிரிழந்தனர்.

ஜெர்மனியில் பிறந்த யாரோன் இஸ்ரேலுக்கு குடிபெயர்ந்து, அதன் பின்னர் வாஷிங்டனில் தூதரகத்தில் அரசியல் பிரிவில் பணிபுரிந்தார்.

சாரா, கான்சஸில் பிறந்தவர், இயற்கை வளங்கள் மற்றும் திடமான அபிவிருத்தி தொடர்பான முதுகலைப் பட்டம் பெற வாஷிங்டனுக்கு வந்தார். ஹமாஸ் தாக்குதலுக்கு பின்னர் தூதரகத்தில் இணைந்து கொண்டார்.

அவர்கள் பணிபுரிந்த தூதரகத்திலேயே காதல் மலர்ந்தது. இருவரும் பொதுவாக மதிய உணவுக்கு ஒன்றாகச் செல்வது வழக்கம். “நெட்ஃபிளிக்ஸ் காதல் படத்தின் போஸ்டர் மாதிரி,” என ஒருவர் குறிப்பிட்டார்.

யாரோன் ஜெருசலேமில் திருமணத்திற்கு முன் மோதிரம் ஒன்றையும் வாங்கியிருந்தார் என்றும், இருவரும் விரைவில் யாரோனின் குடும்பத்தைச் சந்திக்க இஸ்ரேலுக்கு செல்ல திட்டமிட்டிருந்தனர் என்றும் தூதரக ஊடகப் பிரதிநிதி தெரிவித்தார்.

இருவரும் சமாதானத்தை நோக்கி பணியாற்றியவர்கள். சாரா, Tech2Peace எனும் அமைப்பில் ஒரு வருடம் பணியாற்றினார். இஸ்ரேலியர்களும் பஸ்தீனியர்களும் இணைந்து தொழில்நுட்பமும் சுமுக கலாச்சார உரையாடலும் மேற்கொள்கின்ற அமைப்பாக இது அறியப்படுகிறது.

சாராவை அடையாளப்படுத்தும் முக்கிய அம்சம் – மனதார நேசிக்கத் தெரிந்தவர், ஒவ்வொருவரையும் கவனமாகக் கேட்பவர். “அவள் ஒருவருடன் உரையாடும் போது, பூரணமாக அவரிடம் கவனம் செலுத்துவாள்” என தோழி ஒருவர் உருக்கமாக கூறினார்.

அவர்களது நண்பர்கள், சக ஊழியர்கள், சமூகத் தலைவர்கள் – அனைவரும் இருவரையும் தவறவிட்டுவிட்டோம் என்று உருக்கமாகச் குறிப்பிடுகின்றார்கள். அவர்கள் வாழ்ந்திருக்கக் கூடிய வாழ்க்கை, சமாதானத்திற்கு செய்திருக்கும் பங்களிப்பு, இப்போது பறிக்கப்பட்டுவிட்டது.

“இருவரும் இளமையிலும் பிரபலம், திறமைமிக்கவர்கள், உலகத்துக்கு ஒளி புகட்டக்கூடியவர்கள்,” என யூத பெண்கள் அமைப்பின் தலைவர் குறிப்பிட்டார். “அவர்கள் விட்டுச் சென்ற இடத்தை நிரப்ப முடியாது.”

இந்த காதல் ஜோடியின் மரணம் போரின் கோர முகத்தை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளதுடன் உலகம் முழுவதிலும் அதிர்வலலைகளை ஏற்படுத்தியுள்ளது.

MORE ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

LATEST ARTICLES