ஐரோப்பிய ஒன்றியத்துடன் நடந்து வரும் வர்த்தக பேச்சுவார்த்தைகள் முன்னேறவில்லை என்ற காரணத்தால், அங்கிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 50% நேரடி வரி விதிக்க அமெரிக்காவின் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பரிந்துரை செய்துள்ளார்.
இந்த நடவடிக்கையை 2025 ஜூன் 1 முதல் அமல்படுத்த திட்டமிட்டுள்ளதாக அவர் Truth Social தளத்தில் இன்று வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்துள்ளார்.
“அவர்களது சக்திவாய்ந்த வர்த்தகத் தடைகள், பெறுமதி சேர் வரிகள் (VAT), அபத்தமான நிறுவன அபராதங்கள், பணவியல் அல்லாத தடைகள், நாணய நிர்வாகக் கையாளல்கள் மற்றும் அமெரிக்க நிறுவனங்களை எதிர்த்து தொடுத்திருக்கும் நியாயமற்ற வழக்குகள் ஆகியவை அமெரிக்காவுடன் 250 பில்லியன் டொலர்களுக்கு மேல் வர்த்தகக் குறைபாடை உருவாக்கியுள்ளன. இது ஏற்க முடியாத அளவுக்கு அதிகம்,” என டிரம்ப் தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய ஆணையத்தின் செய்தித் தொடர்பாளர் ஒலோஃ ஃகில், தற்போதைக்கு கருத்துத் தெரிவிக்க மறுத்துள்ளார்.
டிரம்பின் எச்சரிக்கைக்கு பின்னர் உலக பங்குச் சந்தைகள் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.
- ஐரோப்பிய STOXX 600 குறியீட்டு குறிப்பு 7% வீழ்ச்சி.
- ஜெர்மனியின் DAX குறியீட்டு குறிப்பு 4%,
- பிரான்சின் CAC குறியீட்டு குறிப்பு 2%,
- லண்டனின் FTSE குறியீட்டு குறிப்பு 1% வீழ்ந்தன.
- அமெரிக்க Dow Jones குறியீட்டு குறிப்பு 480 புள்ளிகள் (அல்லது 15%) குறைந்தது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் திட்டங்கள் மற்ற முக்கிய வர்த்தகக் கூட்டாளர்களுடன் ஒப்பிடும்போது தரமற்றதாக இருக்கின்றன” என அமெரிக்க நிதிச் செயலாளர் ஸ்காட் பெசென்ட் கூறினார்.
ஐரிஷ் பிரதமர் மைக்கேல் மார்டின், டிரம்பின் நடவடிக்கையை “மிகுந்த மோசமான ஒன்று” என கூறியுள்ளார்.
பிரான்ஸ் வர்த்தக அமைச்சர் லாரன்ட் செயின்-மார்டின், “இத்தகைய மிரட்டல்கள் பேச்சுவார்த்தைக்காலத்தில் உதவாது. எங்கள் நிலைப்பாடு மாற்றமில்லை: பதற்றம் குறைக்கவேண்டும், ஆனால் பதிலடி அளிக்க தயார்” என X தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இதேவேளை, Apple நிறுவனம் ஐபோன்களை வெளிநாட்டில் உற்பத்தி செய்வதைத் தொடருமானால் 25% வரி விதிப்பேன் என்றும் டிரம்ப், தனது Truth Social பதிவில், எச்சரித்துள்ளார்.
இந்த வாரம் அவர் Apple தலைமை செயல் அதிகாரி டிம் குக் உடன் சந்தித்திருந்தார். ஆனால் இந்த திடீர் நடவடிக்கைக்கு காரணம் என்ன என்பது தெளிவாகவில்லை.