உக்ரைனின் தலைநகரான கீவ், வெள்ளிக்கிழமை இரவு தொடங்கி சனிக்கிழமை காலை வரை, ரஷ்யாவின் பாரிய அளவிலான ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதலுக்கு உள்ளாகியது.
இது ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே கைதிகள் பரிமாற்றம் தொடங்கிய சில மணி நேரங்களுக்குப் பிறகு இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
உக்ரைனின் தேசிய காவல்துறையின் டெலிகிராம் கணக்கில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
தாக்குதல்களினால், நகரின் பல பகுதிகளில் குறைந்தது 15 பேர் காயமடைந்துள்ளனர்.
, இந்த தாக்குதல் நகரம் முழுவதும் தீவிர சேதங்களை ஏற்படுத்தியதாகவும், பல குடியிருப்புகள் தீப்பற்றியதாகவும்
கீவ் மாநகர மேயர் விட்டாலி கிளிட்ச்கோ கூறியுள்ளார்.
இந்த இரவுத் தாக்குதல், உக்ரைன்-ரஷ்யா இடையேயான மிகப் பெரிய சிறை கைதிகள் பரிமாற்றத்தின் முதல் கட்டத்தைத் தொடர்ந்து இடம் பெற்றது.
வெள்ளிக்கிழமை தொடங்கிய இந்த பரிமாற்றம் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமையிலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இரு தரப்பும் தலா 1,000 பேர் வீதம், மொத்தம் 2,000 கைதிகளை பரிமாறிக்கொள்கின்றன.
இஸ்தான்பூலில் நடந்த சமீபத்திய உச்சி மாநாட்டில், இரு தரப்பும் நேரடியாக சந்தித்தது இது முதன்முறை. இந்த சந்திப்பின் ஒரே முக்கிய முடிவாக, கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தம் அமைந்தது.