முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்படும் நலன்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியங்கள் என்பனவற்றை ரத்து செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
1986 ஆம் ஆண்டு எண் 4 எனும் ஜனாதிபதிகளின் உரிமைகள் சட்டம் மற்றும் 1977 ஆம் ஆண்டு எண் 1 எனும் நாடாளுமன்ற ஓய்வூதிய சட்டம் ஆகியவற்றின் கீழ் வழங்கப்படும் நலன்களை குறைப்பதற்கும் இரத்து செய்யவதும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு இரு சட்ட மூலங்களை உருவாக்க நீதிமன்ற அமைச்சரால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை இன்று அனுமதி வழங்கியுள்ளது.
இந்த சட்டமசோதாக்கள் மூலம்,
- முன்னாள் ஜனாதிபதிகளுக்கும்,
- அவர்களின் குடும்பத்தினருக்கும் வழங்கப்படும் விசேஷ நலன்கள் மற்றும்
- நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் பதவிக்காலம் முடிந்த பின்பு பெறும் ஓய்வூதியம் ஆகியவை நீக்கப்படும்.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட வாக்குறுதிக்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.