எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் வரையில் எரிபொருள் கையிருப்பில் உள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
மத்திய கிழக்கில் நிலவிவரும் போர் பதற்ற சூழல் காரணமாக இலங்கையில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்படும் என போலிச் செய்திகள் பிரசாரம் செய்யப்பட்டு வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடி இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் வரையில் நாட்டில் எரிபொருள் கையிருப்பு காணப்படுவதாகவும் எதிர்வரும் டிசம்பர் மாதம் வரையில் எரிபொருள் பெற்றுக் கொள்வதற்கான விநியோகம் ஒப்பந்தங்கள் ஏற்கனவே கையொப்பமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு கொண்டுவரப்படும் எரிபொரு ட்களில் பெரும்பாலான எரிபொருட்கள் போர் இடம்பெற்று வரும் பிராந்தியத்திற்கு வெளியே கொண்டு வரப்படுவதாக அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.
குறிப்பாக இந்தியா சிங்கப்பூர் போன்ற நாடுகள் ஊடாக எரிபொருள் கொண்டு வரப்படுவதனால் போர்ச்சூழலினால் எரிபொருள் வினியோகத்திற்கு பாதிப்பு ஏற்படக்கூடிய சாத்தியங்கள் கிடையாது என அவர் தெரிவித்துள்ளார்.
எனவே தேவையற்ற வகையில் பதற்றமடைந்து எரிபொருட்களை களஞ்சிய படுத்துவதனை தவிர்க்குமாறு அவர் பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
சிலர் தேவையற்ற பதட்டத்தினால் எரிபொருட்களை சேகரித்து வைப்பதாகவும் இதனால் கொள்கலன்களில் எரிபொருள் விற்பனை செய்வதற்கு தடை விதிப்பதாகவும் அமைச்சர் குமார ஜயக்கோடி தெரிவித்துள்ளார்.