ஈரானில் உள்ள பல இராணுவ மற்றும் அணுசக்தி தொடர்பான இடங்களை இஸ்ரேல் விமானப்படை தாக்கியதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் (IDF) இன்று உறுதிப்படுத்தியுள்ளது.
தாக்குதல்களில் முக்கிய இலக்காக இருந்தது அரக் அணுசக்தி நிலையம், இது தற்போது செயலற்ற நிலையில் இருந்தாலும், “அணு ஆயுதங்களுக்குப் பயன்படுத்தக்கூடிய பிளூட்டோனியம் தயாரிக்க” வடிவமைக்கப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
அணு ஆலையில் உள்ள பிளூட்டோனியம் உற்பத்திக்கான பகுதியே தாக்கப்பட்டது. இதன் நோக்கம், அதை மீண்டும் இயக்கி அணு ஆயுத வளர்ச்சிக்குப் பயன்படுத்துவதைத் தடுப்பதாகும்,” என இஸ்ரேல் தெரிவித்துள்ளது..
அரக் அணுஆலை தெஹ்ரானிலிருந்து 250 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
மேலும், தெஹ்ரானிலிருந்து 300 கிலோமீட்டர் தெற்கே உள்ள நடாஞ்ஸ் பகுதியில் உள்ள மற்றொரு “அணு ஆயுத மேம்பாட்டுத் தளம்” தாக்கப்பட்டதாகவும், அங்கு சிறப்பு உபகரணங்கள் காணப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
இந்த நடாஞ்ஸ் தளம் கடந்த ஜூன் 13-ஆம் திகதி இஸ்ரேலுக்கு எதிராக தொடங்கப்பட்ட தாக்குதலின் போது முதன்முதலாக இலக்காக கொண்டு தாக்கப்பட்டது எனவும் தெரிவிக்கப்படுகிறது.
தற்போது நிகழ்ந்த தாக்குதல்களில், ஈரானின் பாலிஸ்டிக் ஏவுகணைகள், விமான எதிர்ப்பு மிசைல்கள், மற்றும் அதற்கான உபகரணங்களை உற்பத்தி செய்யும் இராணுவ தொழிற்சாலைகள் மற்றும் மூலப்பொருள் தயாரிப்பு இடங்கள் ஆகியனவும் இலக்குகளாக தேர்ந்தெடுக்கப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.